நட்பின் இருக்கை யாதெனில்!
Feb 11, 2026,03:45 PM IST
- சு. யாமினி பிரியா
நட்பு எனும் ஒர் உன்னதம்,
வாழ்வில் கிடைக்கப்பெற்றால்
நடப்பவை எல்லாம் அதிசயமே!!!
முடவனை கூட ஆகாயத்தில் பறக்க வைக்கும்
அதிசயமாம் நட்பு!!!
தோல்வியால் துவண்ட மனதையும் உரமேற்றி,
மெருகேற்றி சாதிக்க வைக்கும் உன்னத பூ நட்பு!!!
எல்லையில்லா அன்பையும் அக்கறையும்
வாரி வழங்கும் வள்ளலாய்
வசந்தமாய் வந்த பூ நட்பு!!!!
கண்ணாடியை போல் நம்மை பிரதிபலிக்க வந்த
கண்ணியமான பூ நட்பு!!!!
அள்ள அள்ள குறையாத அதிசயங்களை நிகழ்த்தி காட்டும்
பூ நட்பு!!!!
நட்பின் இருக்கை யாதெனில்
நட்பே நீயல்லவோ
வாழ்வின் போராட்டங்களை கடக்க உதவும் கட்டுமரம்!!!
உணர்வுகளாலும் சிந்தனைகளாலும் ஒன்றுபட்டு
வாழ்வு எனும் உயிரில் கலந்த உறவே
நீ ஒரு பொக்கிஷம்!!!
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது முதுமொழி
உற்ற நண்பன் உடையான் சாதிக்க அஞ்சான் என்பது புது மொழி!!!
(சு.யாமினி பிரியா, கோயம்புத்தூர்)