நாமக்கல், கரூர்.. இன்று விஜய் செய்யப் போகும் 2 தரமான சம்பவங்கள்.. பரபரப்பில் களம்!
சென்னை : தவெக தலைவர் விஜய் இன்று முதலில் நாமக்கல்லிலும், பிறகு கரூரிலும் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த தொகுதி என்பதால் கரூர் மாவட்டத்தில் விஜய் என்ன பேச போகிறார் என்பதை தான் பலரும் கவனித்து வருகிறார். ஆனால் இன்று முதலில் நாமக்கலுக்கு சென்று விட்டு, பிறகு கரூர் செல்லலாம் என விஜய் முடிவு செய்ததற்கு காரணம் இரண்டு தரமான சம்பவங்களுக்கு அவர் ஏற்கனவே தயாராகி விட்டதை தான் காட்டுகிறது.
நாமக்கல்லில் என்ன இருக்கிறது என விஷயம் தெரியாதவர்கள் கேட்கலாம். ஆனால் அங்கு தான் முக்கியமான மாஸ்டர் பிளானே உள்ளது. நாமக்கல் மாவட்டம் முட்டைக்கு பிரபலமாக இருந்தது ஒரு காலம். ஆனால் இப்போது கிட்னி திருட்டிற்கு பிரபலமான மாவட்டமாக மாறி உள்ளது. அங்குள்ள நெசவாளர்கள் தான் வறுமையின் காரணமாக கிட்னியை விற்று வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த கிட்னியை விற்பதிலும் அவர்களை ஏமாற்றி முறைகேடு நடந்துள்ளதை தமிழக அரசு உருவாக்கிய விசாரணை குழுவின் அறிக்கையே சொல்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக.,விற்கு தொடர்புடைய நிர்வாகியின் மருத்துவமனையின் பெயரும் அடிபட்டது.
ஏற்கனவே கடந்த வார பிரச்சாரத்தின் போது நாகை மற்றும் திருவாரூரில் திமுக.,வையும் முதல்வரை நேராக குறிப்பிட்டு விஜய் கேள்வி கேட்க துவங்கி விட்டார். இந்த பேச்சு இந்த வாரம் வரை தமிழக அரசியலில் பேசு பொருளாக இருந்து வருகிறது. தேசிய அரசியலும் இதை கவனிக்க துவங்கி உள்ளது. இந்த சம்யத்தில் இன்று கிட்னி விவகாரம் குறித்து விஜய் பேசினால் அது தேசிய அளவில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும். இது திமுக.,விற்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். அதனால் இன்றைய கூட்டத்தில் திமுக.,வை விமர்சித்து விஜய் எதுவும் பேச வேண்டியது கிடையாது. கிட்னி விவகாரத்தை கையில் எடுத்தாலே மொத்த மீடியாவும் நேரடி செய்து கொண்டிருப்பதால் அது பரபரப்பாகி விடும்.
டார்கெட் செந்தில் பாலாஜி
அடுத்ததாக செந்தில் பாலாஜியின் தொகுதியான கரூரில் பேசுவதற்கு விஜய்க்கு ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. முதல்வருக்கு மிகவும் நெருக்கமானவர் செந்தில் பாலாஜி. அதோடு லஞ்ச வழக்கில் சிறை சென்று வெளி வந்தவருக்கு அமைச்சர் பதவி கொடுத்ததை விஜய் பேசினால் தமிழக அரசியல் களமே அதிரும். இரண்டு நாட்களுக்கு முன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கரூரில் பிரச்சாரத்திற்கு சென்ற போது சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். அப்படி இருக்கையில் விஜய்க்கு கேட்கவே வேண்டாம். விஜய்யை வரவேற்பதற்காக போஸ்டர், பேனர் கூட வைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளார்களாம்.
அப்படி விஜய்க்காக பேனர் வைத்தவர்கள், அந்த பேனரில் இருப்பவர்களின் பெயர்களை லிஸ்ட் எடுத்து, அவர்களுக்கு காஸ்ட்லி பரிசும் கொடுக்கப்பட்டு, இன்று விஜய் வரும் போது கூட்டம் அதிக அளவில் கூட்டம் கூடக் கூடாது என்று வேறு உத்தரவு பறந்துள்ளதாக சொல்லப்படுகிறது. திமுக முப்பெரும் விழா நடத்திய, இபிஎஸ் பிரச்சாரம் செய்த அதே பகுதியில் தான் விஜய் பேசுவதற்கும் அனுமதி வழங்கி உள்ளார்கள்.
விஜய் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது 4 இடங்கள். ஆனால் அவர்கள் வேலுச்சாமிபுரத்தில் மட்டும் தான் அனுமதி அளித்துள்ளார்கள். இது ஒன்றரை லட்சம் பேர் வரை கூடக் கூடிய இடம் என திமுக.,வே ஏற்கனவே சொல்லி விட்டது. இதில் விஜய்க்கு எவ்வளவு கூட்டம் வர போகிறது என்பது தான் விஜய் இன்று காட்ட போகும் மாஸாக இருக்கும். அப்படி விஜய்க்கு அதிக கூட்டம் சேர்ந்து விட்டால் என்ன செய்வது என்பது தான் தற்போது திமுக.,வின் பதற்றமாக உள்ளது.