சனிக்கிழமை வந்தாச்சு.. நாமக்கல், கரூரில் என்ன பேசுவார் விஜய்?.. குத்தவச்சுக் காத்திருக்கும் கட்சிகள்

Sep 27, 2025,08:55 AM IST
சென்னை: சனிக்கிழமை தோறும் பிரச்சார சுற்றுப் பயணம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நாமக்கல், கரூரில் இன்று அவர் பேசவுள்ளார். அவர் என்ன பேசப் போகிறாரோ என்ற ஆர்வம் தவெகவினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும் தொற்றியுள்ளது. தமிழ்நாட்டு மக்களும் கூட பெரும் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

தனது பிரச்சாரக் கூட்டங்களை தவெக தலைவர் விஜய் அறிவித்ததும் விக்கிரவாண்டி, மதுரை மாநில மாநாடுகளில் பேசியது போல் பஞ்சாக நான்கு அரசியல் டயலாக்குகள் பேசி விட்டு செல்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் உள்ளூர் பிரச்சனைகள், அரசியல் விமர்சனங்கள் என பேசி மக்களின் ஆதரவை பெற்று வருகிறார் விஜய். ஒவ்வொரு கூட்டத்திற்கும் இடையே பெரும் வித்தியாசத்தையும் ஏற்படுத்தி வருகிறார்.



திருச்சி, அரியலூரில் பேசியதை விட நாகை, திருவாரூரில் திமுக அரசை மிக கடுமையாக விமர்சித்து, நேருக்கு நேராக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பி, தான் முழு நேர அரசியல்வாதியாக மாறி வருவதை காட்டி உள்ளார் விஜய். இதனால் இந்த வாரம் சனிக்கிழமை விஜய் எந்த ஊரில், என்ன பேச போகிறார் என்பதை பார்க்க மக்கள் மட்டுமல்ல, அரசியல் கட்சிகளும், மீடியாக்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றன. முதல்வரின் சொந்த ஊரிலேயே போய் திமுக.,வை மிக கடுமையாக விமர்சித்து விட்டு வந்த விஜய் இன்று கரூருக்குப் போகப் போகிறார்.. அதுதான் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் திமுக முப்பெரும் விழாவை நடத்தி முடித்த கரூரில் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். முதலில் நாமக்கல்லிலும், பிறகு கரூரிலும் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். இழுபறியாக இருந்து ஒரு வழியாக கரூரில் பிரச்சாரம் செய்வதற்கு விஜய்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரம் பஸ் ஸ்டாப் அருகில் பேசுவதற்கு விஜய்க்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். கரூர் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்றால் அது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோட்டையாக இருப்பதால் மட்டுமல்ல, கொங்கு மண்டலத்தை தற்போது திமுகவுக்கு சாதகமாக மாற்றி வைத்த பெருமைக்குரியவர் அவர் என்பதாலும்தூன்.

கரூர் அவருடைய சொந்த தொகுதி என்பதால், விஜய்யின் பேச்சு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  அதாவது கொங்கு மண்டல திமுகவின் முக்கிய தளபதியின் கோட்டைக்குள் இன்று காலடி எடுத்து வைக்கிறார் விஜய் கரூரை பொறுத்தவரை உள்ளூர் பிரச்சனைகள் என்றால் மணல் கொள்ளை, நெசவாளர்கள் பிரச்சனை, டாஸ்மாக் விவகாரம், மின்சார வாரியத்தில் நடைபெற்ற முறைகேடு, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக லஞ்ச வாங்கி விவகாரம் இதை தான் விஜய் மையமாக வைத்து பேச வாய்ப்புள்ளதாக தவெகவினர் கூறுகிறார்கள்.



அரசியல் ரீதியாக என்று பார்த்தால், செந்தில் பாலாஜி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்பு வைத்த பழைய விமர்சன வீடியோ பற்றி விஜய் பேச வாய்ப்புள்ளது. அதே வீடியோவைத்தான் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் போட்டுக் காட்டினார் என்பது நினைவிருக்கலாம். திருவாரூரில் டி.ஆர்.பி.ராஜாவை, முதல்வர் குடும்பத்திற்கு வேலை செய்வதற்காகவே இருக்கிறார் என மறைமுகமாக விமர்சித்தார் விஜய். அதே போல் கரூர் மாவட்டத்திலும் திமுக.,விலும் செல்வாக்கு வாய்ந்தவராக இருக்கும் செந்தில் பாலாஜி பற்றி விஜய் என்ன பேச போகிறார், என்னென்ன விமர்சனங்களை முன் வைக்க போகிறார் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

விஜய் பேச்சு ஒரு பக்கம் இருந்தாலும், கரூரில் திமுக நடத்திய முப்பெரும் விழாவிற்கு மழை காரணமாக குறைந்த அளவிலேயே மக்கள் வந்ததாக ஒரு தகவல் சொல்லப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் செந்தில் பாலாஜியை கேட்காமல் ஒரு எறும்பு கூட கரூக்குள் நுழையாது என்ற அளவிற்கு நிலை இருக்கும் போது, விஜய்க்கு எந்த அளவிற்கு கூட்டம் வரும்? அவர் என்ன பேசப் போகிறார்.. காத்திருப்போம்.!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நாமக்கல், கரூர்.. இன்று விஜய் செய்யப் போகும் 2 தரமான சம்பவங்கள்.. பரபரப்பில் களம்!

news

அண்ணா, எம்ஜிஆர் குறித்து இனியும் அநாகரீகமாக பேசினால்.. சீமானுக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை

news

இது ஒரு சனியன்.. அது ஒரு சனியன்.. அண்ணா, எம்ஜிஆர் குறித்த சீமான் பேச்சால் சலசலப்பு!

news

இன்று நவராத்திரி 6ம் நாள்...அம்பிகையின் வடிவம், பிரசாதம், நிறம், மலர் பற்றிய முழு விபரம்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 27, 2025... இன்று பாச மழையில் நனைய போகும் ராசிகள்

news

சனிக்கிழமை வந்தாச்சு.. நாமக்கல், கரூரில் என்ன பேசுவார் விஜய்?.. குத்தவச்சுக் காத்திருக்கும் கட்சிகள்

news

வானிலை எச்சரிக்கை: இன்று 6, நாளை 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

news

நாளை கரூர், நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம்: தொண்டர்களுக்கு தவெக தலைமை அறிவுரை!

news

இந்த விருது என்னுடையது மட்டுமல்ல, நம்முடையது: கலைமாமணி விருது குறித்து அனிருத் நெகிழ்ச்சி பதிவு

அதிகம் பார்க்கும் செய்திகள்