மற(றை)ந்த பொங்கல் ..!
Jan 13, 2026,01:28 PM IST
- கவிசப்ரி தென்றல், தென்காசி
மண் வாசம் வரும் போதே தெரியும்
வருவது பொங்கலல்லவா....
அம்மா வடித்த பொங்கல் அடுப்பைக்
கண்டு வியந்து போனேன்
அவளும் ஓர் சிற்பி
பழையதைத் தேடி தேடி தேடும் போது
மனதிலே ஊஞ்சலாடுமே
கடந்த கால நினைவுகள்
இல்லங்கள் தோறும் மின்னிடுமே
வெண் மேகங்கள் வந்து
வர்ண ஞாலம்
செய்தது போல் ...
எங்கே என் பொங்கல்
தேடுகிறேன்
என்னவள் வடித்த
கோலங்களை
ஓர் திங்கள் பார்த்து
பார்த்து ரசிப்பேனே
பொங்கலோ பொங்கல்
இசைப்பாடி
கதிரவனை விழிக்க
வைப்பாளே என்னவள்
மறந்து போன பொங்கலே ....!