- த.சுகந்தி, M.Sc,B.Ed
மயிலாடுதுறை: தமிழகத்தின் பொங்கல் பண்டிகைக்கு ஒத்த பஞ்சாபியர்களின் அறுவடைத் திருவிழாவான லோஹ்ரி (Lohri) பண்டிகை மற்றும் சித்த தினத்தை பற்றி தெரிந்து கொள்வோமா?
ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்வதில் பெருமை அடைவோம். அறுவடைத் திருவிழா, விவசாயிகளின் உழைப்பைப் போற்றும் விழாவாக பஞ்சாப்பில் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் குளிர்காலத்தின் முடிவு மகிழ்ச்சிகரமான ஒன்றாகும். ஆண்டுதோறும் ஜனவரி 13 அன்று லோஹ்ரி பண்டிகை குறிப்பாக வட இந்தியாவில் ஒரு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இது குளிர்கால ரபி பயிர்களின் அறுவடை மற்றும் குளிர்கால சங்ராந்தியின் முடிவைக் குறிக்கிறது. இது சூரியனையும் நீண்ட நாட்களின் தொடக்கத்தையும் கொண்டாடுகிறது.இது "லொறி" (Lullaby) என்ற தாலாட்டுப் பாடல்களையும் குறிக்கலாம், இவை குழந்தைகளைத் தூங்க வைக்கும் இனிமையான பாடல்கள் ஆகும்.

இந்த நாட்களில் மக்கள் நெருப்பைச் சுற்றி நடனமாடி, தீயில் மக்காச்சோளம், எள்ளு, பொரி போன்றவற்றை எறிந்து வழிபடுவார்கள்.
ஜனவரி 13 ஆம் தேதி தமிழ்நாட்டில் போகி பண்டிகை (போகி Pongal) கொண்டாப்படுகிறது, இது பொங்கல் திருவிழாவின் முதல் நாள் மற்றும் பழையன கழிந்து புதியன புகுவதைக் குறிக்கிறது. மேலும், இது பாரம்பரிய சித்த மருத்துவத்தின் நிறுவனர் அகத்தியர் பிறந்த தினமாகவும், சித்த தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது, மேலும் வட இந்தியாவில் லோஹ்ரி திருவிழாவும் இதே நாளில் கொண்டாடப்படுகிறது.
போகி பண்டிகை பொங்கல் விழாவின் தொடக்கமாகும். மக்கள் வீடுகளை சுத்தம் செய்து, பழைய பொருட்களை எரித்து, தீயவற்றை நீக்கி, புதிய தொடக்கங்களை வரவேற்கிறார்கள்.
சித்த தினம் (ஜனவரி 13): அகத்தியர் பிறந்த தினமாகக் கொண்டாடப்படுகிறது. சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
இந்த நாட்கள் தமிழ் நாட்காட்டியின்படி, மார்கழி மாதத்தின் இறுதியில் தொடங்கி தை மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கின்றன. எனவே பொங்கல் பண்டிகையுடன் நெருங்கிய தொடர்புடையவை.
விவசாயத்தை போற்றிடுவோம்!
இயற்கை வேளாண்மை செய்திடுவோம்!!
விவசாயிகளை உயர்வாக மதிப்போம்!!!
2026 சட்டசபை தேர்தல்... யாருடன் கூட்டணி?... மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!
தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள் அறிவிப்பு
தமிழர்களின் குரலை அடக்க முடியாது...ஜனநாயகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் காந்தி
புதுசு புதுசா யோசிக்கிறாங்களே...சீனாவில் உயிருடன் இருப்பதை அப்டேட் செய்ய புதிய "ஆப்"
சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம்...ஏற்பாடுகள் தயார்
பிரதமர் மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
தொடர் உயர்வில் தங்கம் வெள்ளி விலை... இன்றைய வெள்ளி விலை என்ன தெரியுமா?
பிளாக் டீ Vs க்ரீன் டீ... ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது தெரியுமா?
{{comments.comment}}