வைகுண்ட ஏகாதசி விரதம்.. இதில் ஏகாதசி ஒரு பெண்.. யார் இந்த பெண்?

Su.tha Arivalagan
Dec 24, 2025,10:35 AM IST

- கலைவாணி கோபால் 


முன்னொரு காலத்தில் தேவர்கள்,முனிவர்கள், மக்கள் என அனைவரும் முரண் என்ற அசுரன் மூலம் பெரும் கொடுமைகள்   அனுபவித்து வந்தனர். இதற்கு முடிவு கொடுக்கும் படி கைலாயம் சென்று சிவ பெருமானை வணங்கி  தீர்வு கேட்டனர்.


சிவபெருமான் ,வைகுண்டம் சென்று திருமால் இடம் சென்று பிரச்சனையை முறையிடும்படி சொன்னார். தேவர்களும் அவ்வாறே போய் விஷ்ணுவிடம் முறையிட்டனர். 


இதன் காரணமாக மகாவிஷ்ணுவிற்கும் அசுர்களுக்கும் கிட்டத்தட்ட 1000 வருடங்கள் போர் நடந்தது. ஆனாலும் இதற்கு முடிவு கிடைக்கவில்லை. ஏனென்றால் முரண் என்பவன் ஒரு பெண்ணால் மட்டுமே அழியக்கூடியவன். என்ற வரம் வாங்கி வந்திருந்தான்.




சுமார் 1000  வருடங்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த போரில் மகாவிஷ்ணு மிகவும் கலைப்படைந்தார். பின்பு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள குகையில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். இதை அறிந்த முரண் அசுரன் அவரை அழிப்பதற்காக சென்றான். அங்கு மகாவிஷ்ணு உறங்கிக் கொண்டிருந்தபோது அவருடைய தேகத்தில் இருந்த ஒரு சக்தி பெண்ணாக மாறி முரண் என்ற அசுரனை அழித்தது.


கண் திறந்த பார்த்த மகா விஷ்ணு. தன் சரீரத்தில் இருந்து தோன்றிய அந்த பெண் ஏகாதசி என்று பெயர் இட்டார். தன் தூக்கத்தை தொலைத்து தன்னை காத்து தந்ததால் ஏகாதசியை சிறப்பிக்கும் வகையில், ஏகாதசி வரும் நாட்களில் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதவி கிடைக்கும். என்று மகாவிஷ்ணு ஏகாதசியிடம் வரம் கொடுத்தார்.... திரும்பவும், ஒளியாக தன்னுள்ளே சேர்த்துக் கொண்டார். 


கண் விழித்து மகா விஷ்ணுவை  காத்தருளியதால் ஏகாதசியில் கண் விழித்து விரதம் இருப்பது என்பது கதையின் வரலாறு படி கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒரு வருடத்தில் 24 ஏகாதேசி வருகிறது. இதில், மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியானது சர்வ ஏகாதசி என்று சொல்லப்படுகிறது. இந்த 24 நாளில் ஏகாதேசி விரதம் இருக்க முடியாதவர்கள் இந்த ஒரு நாளில் விரதம் இருந்து ஸ்ரீ விஷ்ணுவின் அருளைப் பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது.


ராவணன் தன் துன்ப காலங்களில் ஏகாதசி விரதம் இருந்து மகாவிஷ்ணுவின் ஆசி பெற்று துன்பங்கள் நீங்கி வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.