நமது துன்பத்திற்கு நாமே காரணமா?

Maitreyi Niranjana
Jun 11, 2026,11:51 AM IST
- மைத்ரேயி நிரஞ்சனா

இதை நாம் பலமுறை பல பேர் சொல்லி கேட்டிருப்போம்.. நமது துன்பங்களுக்கு நாமே தான் காரணம் என்று.. வெளிப்புற சூழ்நிலைகளும் நம்மை சுற்றி இருக்கும் பலர் தான் காரணம் என்று வெளிப்புறமாக தோன்றினாலும், நாமே தான் நமது துன்பத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்டிருப்பதால் நாம் அதை உண்மையென்று ஒத்துக் கொள்கிறோம்.. இல்லையா? 

நமக்கு எந்த விஷயம் ஆழமாக புரிந்ததோ அதை நாம் கடந்து விடுகிறோம்.. காஷ்முஷ் இந்த கேள்வியை தான் சந்தித்த ஒரு ஞானியிடம் .. எனது துன்பத்திற்கு நானே தான் காரணம் என்று எனக்கு தெரிந்தாலும் துன்பங்களிலிருந்து வெளிவர முடியவில்லையே என்று கேட்டார்.. 

அவரது குரு சொன்னார், உனது துன்பத்திற்கு நீயேதான் காரணம் என்பது வெளிப்புறமாக பார்த்தால் சரி என்றும் ஈசி என்றும் தோன்றும். ஆனால் அதை பார்ப்பது அவ்வளவு எளிதல்ல.. இந்த உண்மை உனக்கு புரிந்து இருந்தால்.. தெரிந்திருந்தால் உனது துன்பங்களும் காணாமல் போயிருக்கும் என்று கூறினார்..

நமது மனம் பிரச்சினைகளையும் அதற்கான நிறைய காரணங்களையும் உருவாக்குகிறது.. நாமே மனம் என்று நினைக்கும் போது இந்த பிரச்சினைகளை நம்மால் பார்க்க முடிவதில்லை.. 

யாரோ ஒருவர் சிகரெட் பிடிக்கலாம்.. அது தவறு என்று சமுதாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது..  அதனால் அது தவறு என்று தெரியும்.. ஆனால் ஏன் சிகரெட் பிடிக்கிறார் என்று அதன் ஆழமான காரணத்தை அறியாத வரை இந்த பிரச்சினையில் இருந்து வெளிவருவது கடினம்.. 



அதேபோல் வேறு ஒருவர் ராம் ராம் என்று மந்திர உச்சாடனம் செய்யலாம்.. இது தவறு என்று யாரும் சொல்வதில்லை.. இந்த மந்திரத்தை சொன்னால் தான் அவருக்கு தூக்கமே வரும்..

சிகரெட் பிடிப்பதும் மந்திரம் சொல்வதும் ஒரு வகையில் ஒன்றுதான்.. இரண்டும் திரும்பத் திரும்ப செய்யப்படுகிறது.... சிகரெட் பிடிக்கும்போது புகை உள்ளே இழுப்பதும் வெளிய விடுவதும்.. என்று திரும்பத் திரும்ப நடக்கிறது..(Repetition)
மந்திரம் சொல்வதும் அதேபோலத்தான்..  Repetitive actions create boredom.. Boredom is relaxing..
 
வெளிப்புறமான செய்கைகளை சரி செய்வதன் மூலம்.. உள்நிலை மாற்றம் நடக்காது.. உள்முக திரும்புதல் மூலம் உள்ளே புதைக்கப்பட்டிருக்கும் காரணத்தை பார்த்தோமானால்..(Finding the root causes ) அது காணாமல் போய்விடும்..
Roots need darkness.. அதேபோலத்தான் உள்ளே புதைந்திருக்கும் காரணங்கள் நாம் பார்க்காத வரை இருட்டில் இருக்கிறது. நாம் பார்க்கும் போது அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறோம்.. அப்போது பிரச்சினையும் சரியாகிவிடும். வேறு எதுவும் செய்யத் தேவையில்லை..

நமது மனம் விதவிதமான பிரச்சனைகளை உருவாக்குகிறது.. ஒன்றை சரி செய்தால் மற்றொரு வழியில் வேறு ஒன்றை உருவாக்கும்.. அதனால் வெளிப்புறத்தை மாற்ற முயலாமல் மனத்தை தாண்டி ஒரு சாட்சியாக இருப்பதால் மட்டுமே துன்பங்களிலிருந்தும் மனத்திலிருந்தும் நமக்கு விடுதலை..

ஒரு சிறிய கதையை பார்ப்போமா..

காஷ்முஷ் காலில் அடிபட்டு சிகிச்சைக்காக ஒரு டாக்டரிடம் சென்றார்.. டாக்டர் மருந்து கொடுத்து விட்டு காலுக்கு கட்டு போட்டு.. ஒரு மாதம் படி ஏறி இறங்க வேண்டாம் என்று கூறி அனுப்பினார்..

ஒரு மாதம் கழித்து காஷ்முஷ் டாக்டரிடம் சென்று கட்டு அவிழ்த்தபிறகு பிறகு இனிமேல் தான் படி ஏறி இறங்கலாமா என்று கேட்டார்.. 

டாக்டர் தாராளமாக படி ஏறி இறங்கலாம் என்று சொன்னார்.. காஷ்முஷ் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் “அப்பாடா.. இப்போதுதான் நிம்மதி.. ஒரு மாதமாக ட்ரெயின் பைப் வழியாக மேல்மாடிக்கு செல்வதாகவும் தனது பக்கத்து வீட்டுக்காரர்கள் அவரை ஒரு தினுசாக பார்ப்பதாகவும் கூறினார். இப்போதுதான் டாக்டர் நிம்மதி.. படி வழியாக ஏறி இறங்கலாம்..”

இந்த கதை வேடிக்கையாக இருந்தாலும் நமது மனம் இவ்வாறு தான் பல விஷயங்களை புரிந்து கொண்டு பிரச்சினைகளை உருவாக்குகிறது..

ஓம் சாந்தி..

நாம் தொடர்வோம்..