- மைத்ரேயி நிரஞ்சனா
இது என்ன தமிழ் பட பாட்டு மாதிரி இருக்கா? இந்த வாரம் ஆசையை பற்றி பாக்க போறோம்..
ஆசையே இல்லன்னா என்ன வாழ்க்கை அப்படின்னு தான் நமக்கு தோணும்.. ஆசையே துன்பத்திற்கு காரணம் அப்படி என்று புத்தர் முதல் பல குருமார்கள் நமக்கு சொன்ன விஷயம்.. ஒரு குருஜி அத்தனைக்கும் ஆசைப்படு என்று சொல்லி இருக்கிறார்.. எனக்கும் அதுதான் சரின்னு தோணுது.. கொஞ்சம் விளக்கமா பார்த்தோம்னா.. அத்தனைக்கும் ஆசைப்படுவதும் ஆசையே இல்லாமல் இருப்பதும் ஒன்னு தான்.. இது ஏதோ விசு படத்தில் வரும் டயலாக் போல இருந்தாலும்.. உண்மை அது தான்..
அத்தனைக்கும் ஆசைப்பட்டால் ஏதாவது ஒன்றின் மீது நம்மால் பற்றுக் கொள்ள முடியாது.. இல்லையா?
ஆசைகள் எங்கிருந்து வருகின்றன? நம் ஐம்புலன்களின் வழியாக நாம் பார்க்கும் கேட்கும் முகரும் உணரும் விஷயங்கள் நமக்கு ஆசையை உண்டு பண்ணுகின்றன.. அடுத்தவர்கள் என்ன வைத்திருக்கிறார்கள் என்ன சாதித்து இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது நமக்கும் அதுபோல இருந்தால் என்ன.. நாமும் அதுபோல் வாங்கினால் என்ன.. நன்றாக இருக்கும் என்ற உணர்வே ஆசை.. பக்கத்து வீட்டு காரை பார்த்தால் நானும் அது போல இல்லை அதைவிட பெரிதாக வாங்க வேண்டும் என்று நினைப்போம்.. ஒரு அழகான வீட்டை பார்த்தால் நாமும் அது போல் கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவோம்..

ஆசை என்பது முடிவே இல்லாதது என்பதை அறிவோமா? ஒரு ஆசையை நிறைவேற்றினால் உடனே அடுத்த ஆசை தோன்றிவிடும்.. ஒரு ஆசை பூர்த்தியாகும் போது அதனால் கிடைக்கும் pleasure சில கணங்கள் மட்டுமே.. ஆசைகளும் ஆசைகள் பூர்த்தி அடைவதும் என்ற பயணம் ஒரு நேர்கோட்டில் செல்லுகிறது..(This movement is in a never ending horizontal line).. ஒரு ஆசை ஏற்படும் போது அது ஒரு சக்தி.. முயற்சி எடுக்கும்போது அந்த சக்தியை உபயோகப்படுத்துகிறோம்.. ஒரு ஆசை ஏற்படும் போது அமைதியாக அதை உற்று மட்டும் நோக்கினால்.. அந்த சக்தி உள்முகமாக திரும்புகிறது.. நீ இந்த ஆசையில்லா பயணம்.. ஒரு செங்கத்துக்கோட்டில் பயணிக்கிறது..( This movement is in vertical direction) இந்த பயணம் தான் வெளிமுகமாகவே இருக்கும் நமது கவனத்தை உள்முகமாக திருப்பி நம்முடைய உள்ளிருப்புக்கு திரும்ப வைக்கும்..
ஒரு சிறிய கதையை பார்ப்போமா?
காஷ்முஷ் தனது குருவை பார்க்க ஒரு நாள் சென்றார்.. அப்போது குரு ஒரு நதியின் கரையில் அமர்ந்து நதியை பார்த்துக் கொண்டிருந்தார்.. காஷ்முஷ் அவரிடம் குருவே என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார்.. அப்போது குரு சொன்னார் நான் இந்த நதி முழுவதுமாக ஓடி முடிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.. இந்த நதியை கடந்து அக்கரைக்கு செல்ல வேண்டும் என்று சொன்னார்..
அதைக் கேட்டவுடன் காஷ்முஷ் சிரித்து விட்டார்.. நதி எப்போது நிற்பது தங்கள் எப்போது அக்கரைக்கு செல்வது என்று கேட்டார்? குரு சொன்னார் நானும் இதே தானப்பா உனக்கு சொல்லிக் கொண்டிருக்கிறேன்.. நீ பணம் சம்பாதிக்க வேண்டும்.. ஒரு பெரிய வியாபாரி ஆக ஆக வேண்டும்.. அனைத்தும் முடித்தவுடன் தான் தியானம் செய்ய முடியும் என்று பல வருடங்களாக என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாயே என்று கூறினார்..
சரிதானே? ஆசைகள் முடிவதில்லை.. தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது வேறு.. அது வாழ்க்கைக்கு அத்தியாவசியம்.. இந்த உயிருக்கு எல்லாம்மாக ஆக வேண்டும் என்பதை பேராசை.. (Being unlimited is the Desire of this Life.. Being Nothing and Being Unlimited are One & the same..)
ஓம் சாந்தி..
நாம் தொடர்வோம்..
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}