இப்பூவுலகில் அழகில் சிறந்த பெண்கள் எங்கே ??

Su.tha Arivalagan
Jan 22, 2026,02:42 PM IST

- ஷீலா ராஜன்


மான் விழி அழகு 

ஆந்தையின் விழியும் அழகுதான்


மயிலின் தோகை அழகு  

சேவலின் இறகுகளும் அழகுதான்


குயிலின் குரல் அழகு 

மயிலின் அகவலும் அழகுதான்


வண்ணத்துப் பூச்சியும் அழகுதான் 

நிறமே இல்லாத தட்டான் பூச்சியின் இறக்கையும் அழகுதான்


உயரமான ஒட்டகச்சிவியும் இங்கே அழகுதான் 

குள்ள வாத்தும் அழகுதான்




குனித்த புருவமும் கோவை செவ்வாயும் 

மான் விழியும் துடியிடையும் தங்க நிற மேனியும் 

அழகு என்போர் 

ஆப்பிரிக்க நங்கைகளை என்னவென்பார்?


புருவம் இல்லாத சிறு கண்கள் கொண்ட 

சின்னஞ்சிறிய இதழ்களைக் கொண்ட சைனாவின் மங்கைகளை 

பார்த்து நகைத்து  விடுவார்களோ?


அப்படியானால்

இப்பூவுலகில் அழகில் சிறந்த பெண்கள் எங்கே ??


அனைவர் வீட்டு முகம் பார்க்கும் கண்ணாடியில் தெரியும்

அவரவர் முகம் தானே பேரழகு!