மூல முதற் கடவுள்.. விநாயகருக்கு அப் பெயர் வரக் காரணம் என்ன.. தெரியுமா உங்களுக்கு?
- ந. லட்சுமி, மன்னார்குடி
மூல முழு முதற் கடவுள்
ஓம் ஸ்ரீ வக்ரதுண்ட மஹாகாய
ஸூர்ய கோடி ஸம ப்ரபா
நிர்விக்னம் குரு மே தேவ
ஸர்வ கார்யேஷு ஸர்வதா
வளைந்த தும்பிக்கை கொண்டவரே, பிரம்மாண்டமான உடலைக் கொண்டவரே, கோடி சூரியனின் பிரகாசம் கொண்டவரே, உன்னை வணங்கி என் காரியங்கள் அனைத்தையும் தொடங்குகிறேன். அதில் எந்தவித தடைகளும் இல்லாமல், அனைத்து செயல்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும். என்று மூலமுதற்க் கடவுளின் மந்திரத்தை சொல்லி, மூல முதற் கடவுளான விநாயகரை வணங்கி தொடங்குகிறேன்.....
கணபதி, கணேசன், விக்னேஸ்வரர், பிள்ளையார், மூல முதற் கடவுள், ஆனை முகத்தான், விநாயகர், கஜானனன் என பல பெயர்களில் அழைக்கப்படும் விநாயக பெருமான் பல பெயர்களில் நம் இந்து மதத்தில் முதற்கடவுளாக கொண்டாடப்படுகிறார். ஏனென்றால் அதன் விளக்கத்தை பார்ப்போம்.
மூல முதற் கடவுள் என்று இந்து மத கடவுளான விநாயகருக்கு அப் பெயர் வரக் காரணம் என்ன?
விநாயகருக்கு தாயும் தகப்பனுமாய் இருக்கிற சிவன் சக்தி இவர்கள் மூத்தவர்களாக இருக்கையில், இன்னும் சொல்லப்போனால்,
உலகில் படைத்தல், காத்தல், அழித்தல் (முத்தொழில்) செய்யும் கடவுள்களாக மும்மூர்த்திகளான,
பிரம்மா (படைப்பவர்),
திருமால் (காப்பவர்),
சிவன் (அழிப்பவர்) ஆகியோர், விநாயகருக்கு மூத்தவர்களாக,
இந்து சமயத்தில் போற்றப்படுகிறவர்கள் இருக்கும்பொழுது, விநாயகர் "முழு முதற் கடவுள்" என்று அழைக்கப்படுவதற்கு முக்கியக் காரணம், எந்தவொரு சுப காரியம் செய்யும் பொழுதும் அல்லது பூஜையைத் தொடங்குவதற்கு முன்பும் முதலில் வணங்கப்படும் தெய்வமாக விநாயகர் இருக்கிறார். அவர் ஞானம், புத்திசாலித்தனம், தடைகளை நீக்கும் ஆற்றல் ஆகியவற்றின் உருவமாக இருப்பதால், அவர் எந்தச் செயலையும் தொடங்கும்போது தடைகள் நீங்கி வெற்றி பெற அருள் புரிகிறார், இதனால் அவர் "ஆதி" (முதல்) கடவுள் என்று போற்றப்படுகிறார்.
"முழு முதற்கடவுள் என்ற பெயர் வரக் காரணங்கள்"
தொடக்கத்தின் கடவுள்: எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும், முதல் வழிபாடு விநாயகருக்கே செய்யப்படுகிறது. இதுவே அவரது "முழு முதற்" நிலைக்குச் சான்றாகும்.
ஞானம் மற்றும் மோக்ஷ்ம்:
"க"* என்பது *ஞானத்தையும், "ண" என்பது மோக்ஷ்த்தையும் குறிக்கிறது.
எனவே, கணபதி என்ற பெயரே ஞானத்தையும் மோக்ஷ்த்தையும் அருளும் தலைவன் என்று பொருள்படும்.
தடைகளை நீக்குபவர்: விநாயகர் தடைகளை நீக்கும் கடவுள். எனவே, எந்தத் தடையுமின்றி காரியங்கள் நடைபெற, அவரை முதலில் வணங்குவது வழக்கம்.
ஆதி பரம்பொருள்: சில நூல்களின்படி, விநாயகர் அனைத்து கடவுள்களுக்கும் ஆதி பரம்பொருளாக விளங்குகிறார். எனவே, அவரே முழுமுதற் கடவுள் என்ற நிலையை அடைகிறார்.
கணபதி:
'கணேசன்' என்றால் தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்று பொருள்.
இதுவும் அவரது முதன்மையான நிலையை உணர்த்துகிறது. இந்தக் காரணங்களாலேயே, இந்து சமயத்தில் எந்தவொரு முக்கிய நிகழ்வையும் விநாயகர் வழிபாட்டுடன் தொடங்குவது ஒரு மரபாகவே உள்ளது. இதனால் அவர் "முழு முதற்கடவுள்" என்று போற்றப்படுகிறார்.
(ந.லட்சுமி, மன்னார்குடி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)