- எழுத்தாளர் சைவ சித்தாந்தச்சுடர் சிவ. பா. சுமதி மோகன்
இறைவன் ஜம்புகேஸ்வரர் இறைவி அகிலாண்ட நாயகி. தீர்த்தம் காவிரி ஆறு. தல விருட்சம் வெள்ளை நாவல் மரம். பாடியோர் திருஞானசம்பந்தர். 21 பாடல்கள், சுந்தரர் பத்து பாடல்கள், மாணிக்கவாசகர் ஓரடி.
திருச்சியில் இருந்து ஸ்ரீரங்கம் சமயபுரம் லால்குடி மண்ணச்சநல்லூர் குணசீலம் போன்ற ஊர்களுக்கு செல்லும் நகரப் பேருந்துகளிலும் ஏறிச் செல்லலாம். ஸ்ரீரங்கம் பேருந்துகள் அதிகம். திருச்சிக்கு வடக்கே இரண்டு கிலோமீட்டர். வெள்ளை யானை வழிபட்டதால் திரு ஆனைக்கா என்று பெயர் பெற்றது.
சிலந்தியும் யானையும் வழிபட்ட தலம். இறைவன் வெள்ளை நாவல் மரத்தடியில் எழுந்தருளி இருப்பதால் ஜம்புகேஸ்வரம் எனப் பெயர் பெற்றது. பஞ்சபூத தலங்களில் இது அப்புத்தலம். அப்பு என்றால் தண்ணீர் ஜம்பு என்றால் வெள்ளை நாவல் எனப் பொருள். இறைவன் இருக்கும் கருவறையில் இன்றும் தண்ணீர் ஊற்றுப் பெருக்கெடுத்து வருவதை காணலாம். இச்சிறப்பால் செழுநீர்த்திரளைச் சென்று ஆடினேனே என்றார் அப்பரடிகள்.
முற்பிறப்பில் சிலந்தியாய் இருந்து ஆனைக்கா அண்ணலை வழிபட்ட காரணத்தால் பிற்காலத்தில் கோச்செங்கட் சோழனாய்ப் பிறந்து ஆலயத்தை கட்டிய பெருமையுடையது. இச்சோழர் சிவபிரானுக்குரிய 70 மாடக் கோயில்களை கட்டினார் என்பது செய்தி. இச்செய்தியை வைணவ ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார்

"இருக்கிலங்கு திருமொழிவாய் என்தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட திருக்குலத்து வளர்சோழன்"
எனப் பாராட்டி உள்ளார். ஐந்தாம் பிரகாரமான விபூதிப் பிரகாரத்தில் உள்ள மதிலை திருநீற்றான் மதில் என்பர் .இம்மதிலைக் கட்டி முடித்தவுடன் வேலை செய்தவர்களுக்குச் சித்தராய் வந்த சிவபெருமான் திருநீற்றைக் கொடுக்க அவர்களும் அதனைப் பெற்று கையைத்திறந்து பார்க்கும் போது கையிலிருந்த திருநீறு பொன்னாக மாறியிருந்த அதிசயத்தைப் பெற்ற இடம் இது.
இத் திருக்கோயிலில் நிகழும் பஞ்சப் பிரகாரவிழா ( பங்குனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் நடக்கும் சிறப்புடையது ). இறைவனை அம்மன் பூஜித்த பழங்கால வழக்கத்தை இன்றும் கூட உச்சிக்கால பூஜையில் பண்டிதர் அம்மன் சந்நிதியிலிருந்து பெண் வேடமிட்டு ஐயன் சந்நிதி சென்று பூஜையை முடித்த பிறகு காராம் பசுவுக்குப் பூஜை செய்வார். இந்த நிகழ்ச்சி அனைவரும் காணவேண்டிய ஓர் அற்புதமான நிகழ்வுகளில் ஒன்று.
குன்றே அமர்வாய் கொலையார் புலியின் தன்தோலுடையாய் சடையாய் பிறையாய் வென்றாய் புறமூன்று ஐவெண் நாவலுளே நின்றா யருளாய் எனும் நேரிழையே. ( 2.6 )
மாலயன் தேடிய மயேந்திரரும் காலனை உயிர் கொண்ட கயிலையாரும் வேலையது ஓங்கும் வெண்ணாவலாரும்
ஆலைஆ ரூராதி ஆனைக்காவே. (3.3)
துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர் இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
எம்பொன் ஈசன் இறைவனென்று உள்குவார்க்கு அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே. (5.3)
ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகிப் பிறவனைத்தும் நீயாய் நின்றாய் நானேதும் அறியாமே யென்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய் தேனாரும் கொன்றையனே நின்றியூராய் திருவானைக் காவிலுறை சிவனே ஞானம் ஆனாயுன் பொற்பாதம் அடையப் பெற்றால் அல்லகண்டங் கொண்டடியேன் என் செய்கேனே. (6.2)
தந்தை தாய் உலகுக்கோர் தத்தவன் மெய்த்தவத்தோர்க்குப் பந்தமாயின பெருமான் பரிசுடை யவர்திருவடிகள் அந்தன் பூம்புனல் ஆனைக் காவுடை ஆதியை நாளும் எந்தை என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே! (7.4)
தென் ஆனைக்காவானை தென்பாண்டி நாட்டானை. ( திருவாசகம் 8. திருவம்மானை. 19 )
(பா. சுமதி மோகன், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
வெள்ளை யானை வழிபட்ட திருத்தலம்.. திருவானைக்கா.. தேவாரத் திருத்தலங்கள் (2)
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை... வெள்ளியின் விலையும் சற்று குறைவு தான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
{{comments.comment}}