பெண்கள் கவலைப்படுவதை அல்லாஹ் ஏன் விரும்புவதில்லை?

Su.tha Arivalagan
Nov 15, 2025,01:22 PM IST

- கா.சா.ஷர்மிளா


கஸஸ் அத்தியாயத்தில் மூஸா நபியின் தாயாரை பார்த்து: அச்சம் கொள்ளாதீர்! கவலை கொள்ளாதீர்! என்று அல்லாஹ் சொல்கிறான்.


மர்யம் அத்தியாயத்தில் மர்யம் அவர்களை பார்த்து: கவலைப்படாதீர் என அழைத்து சொன்னான்.


அஹ்ஜாப் அத்தியாயத்தில் நபியின் துணைவியர்களைப் பற்றி சொல்லும் போது அவர்கள் கண்கள் குளிர்ச்சியடைவதற்காகவும் அவர்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் இதை சொல்கிறோம்" என்று சொல்கிறான்




பல வசனங்கள் பெண்கள் கவலைப் பட கூடாது என்ற அர்த்தத்தில் வந்துள்ளன.


ஏனென்றால், பெண்களின் கவலை மிக ஆழமாக இருக்கும். கவலை பெண்களின் அழகைப் போக்கி விடும். கவலை பெண்களின் ஹார்மோன் சுரப்பிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.. கவலைப் படும் பல பெண்கள் கருத்தரிப்பதில்லை. கவலைப் படும் பெண்களின் முடி விரைவில் உதிர ஆரம்பிக்கிறது. கவலை படும் எத்தனையோ பெண்களின் நிறம் மங்கி விடுகின்றது.


கண்ணாடி குடுவைகளிடம் மிருதுவாக நடந்து கொள்ளுங்கள். முரட்டுத்தனமாக கையாண்டு அவற்றை உடைத்துவிடாதீர்.


வார்த்தையினால் உங்கள் தாயாரைக் காயப்படுத்தாதீர். உங்கள் சகோதரியிடம் கடுமையாக நடந்துக் கொள்ளாதீர். உங்கள் மனைவியின் உணர்ச்சிகளை புறக்கணிக்காதீர். உங்கள் பெண் குழந்தைகளை புன்னகையுடன் அரவணையுங்கள். 


எப்பொழுதும்  "பெண்களுக்கு நன்மையையே நாடுங்கள" என்ற நபிமொழியை நினைவில் கொள்ளுங்கள்.


(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)