Short story: அவசரம் எதற்கு?

Su.tha Arivalagan
Jun 05, 2026,03:21 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


"சர்" என்று  வேகமாய் பாய்ந்து சென்றது ஒரு ஸ்கூட்டர். தொடர்ந்து சென்றது சிவப்பு நிற ஆடி காரும்; வெள்ளை மாருதியும்.


"இரு! அவசரப்படாதே இந்த அதிகாலையில் வாகன ஓட்டிகள் தாறு மாறாக ஓட்டிக் கொண்டு போவார்கள்" என்று சொன்னார்  பெருச்சாளியார், தம் இணையிடம்.


இந்த இணை, வீதியை குறுக்காக கடக்கும் முன்பே;பெரிய சப்தமும், அழுகுரலும். அப்பகுதியில் எதிரொலித்தது தெருவைக் கடக்க முயன்ற பால்கார கிழவி மேல் ஸ்கூட்டர் மோத; அதை  விரைவாக முந்தி போகும் முயற்சியில் இரு கார்களும் தடுப்புச்சுவரின் மேல் மோதி நின்றிருந்தன.




"உயிர் சேதம் போல; பார்த்துப் போக வேண்டாமா", என்பது போல் ஒருவரையொருவர்  பார்த்துக்கொண்டு, வேகமாக பாலத்துக்கடியில் ஓடி மறைந்தன, தப்பித்த இரு ஜீவன்களும்.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)