சர்வதேச மகளிர் தினத்தை மார்ச் 8ல் ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?

Su.tha Arivalagan
Mar 07, 2026,04:17 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி 20 26 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மகளிர் தின சிறப்புகள் தலைப்பில் நாம் இன்று காணவிருப்பது மகளிர் தினம் ஏன் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது மற்றும் இந்த வருட மகளிர் தின "கருப்பொருள்" -தீம் (theme) பற்றிய சிறு தகவல்களை பார்ப்போம்..


மகளிர் குடும்பத்தை பேணி காப்பது மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும்  கல்வி, பொருளாதாரம், விளையாட்டு,கலை, கலாச்சாரம், அரசுவேலை  மற்றும் அரசியல் ஆகியவற்றில் சாதனைகளை புரிந்து கொண்டு உள்ளனர். மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் ஏன்?கொண்டாடுகிறோம் என்பதை பற்றி பார்ப்போம்..


சர்வதேச மகளிர் தினம் என்பது 1908 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சுமார் 15,000 பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக ஒரு மாபெரும் பேரணியை பெண்கள் நடத்தியதில் இருந்து தொடங்கியது. வேலை  நேரத்தை குறைத்தல்,செய்த வேலைக்கு ஏற்ற ஊதியம், வாக்குரிமை ஆகியவையே இந்த பெண்களின் கோரிக்கையாக இருந்தது. ஒரு வருடம் கழித்து அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி முதல் தேசிய மகளிர் தினத்தை கொண்டாடுவதாக அறிவித்தது.




1910 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் ஜெர்மனியைச் சார்ந்த கிளாரா ஜெட்கின் அவர்கள் மகளிர் தினம் கொண்டாடுவதற்கு முன்மொழிந்தார். உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு  கோபன்   ஹே கனில் நடைபெற்றது.அதில் கிளாரா ஜெட்கின் கலந்து கொண்டார். சர்வதேச அளவில் பெண்களுக்கு என்று ஒரு நாளை ஒதுக்க முடிவு செய்ய வலியுறுத்தினார். அங்கிருந்த அனைத்து பெண்களும் அவருக்கு ஆதரவளித்தனர். அதன்பிறகு 1911 ஆம் ஆண்டு ஆஸ்திரியா, ஜெர்மனி,டென்மார்க் மற்றும் ஸ்விட்சர்லாந்து முதல் முறையாக மகளிர் தினம் கொண்டாடியது.


1917இல் ரஷ்யாவில் பெண்கள் 'ரொட்டி மற்றும் அமைதிக்காக'(bread and peace )மார்ச் 8-ல் போராட்டம் நடத்தினர்.  பின்னர் 1975 ஆம்ஆண்டு மார்ச் எட்டாம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இன்று நாம் அனுபவிக்கும் பல உரிமைகள் அன்றைய பெண்கள் வீதிக்கு வந்து நடத்திய போராட்டங்களின் பலனாக கிடைத்தவை என்பது குறிப்பிட தக்கதாகும்.


"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம்  செய்திடல்  வேண்டுமம்மா " எனும் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பொன்மொழிகளை நாம் நினைவில் கொள்வோமாக. அடிப்படையில் முடங்கிக்கிடந்த பெண் இன்று விண்ணைத்தாண்டி விண்வெளி வரை சாதனைகள் படைத்து வருகிறாள்.


அன்னையாக, சகோதரியாக, தோழியாக, மனைவி,மகள் என பல பரிமாணங்களில் நம் வாழ்வை தாங்கும் பெண்கள் இன்று சமூகத்தின் அனைத்து துறைகளிலும் தலைமை பொறுப்புகளில் இருந்து வருகின்றனர். இத்தகைய பெண்களை கௌரவிக்கும் வகையிலும், அவர்களுடைய சாதனைகளை உலகிற்கு பறைசாற்றும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் எட்டாம் தேதி சர்வதேச "மகளிர் தினம்" உலகம் முழுவதும் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


2026 கருப்பொருள்:


ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்திற்கு என்று ஒரு கருப்பொருள் முன்வைக்கப்படுகிறது. இந்த ஆண்டு 2026 ஆம் ஆண்டிற்கான தீம்- கருப்பொருள் :"Give to gain" "கொடுத்து ஆதாயம்பெறு"- பரஸ்பர உதவி எனும் தத்துவத்தை அடிப்படையாக க் கொண்டது. பெண்களின் கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரத்தில் முதலீடு செய்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஒரு பெண் குழந்தைக்கு தரும் கல்வி தலைமைத்துவம் அல்லது வேலை வாய்ப்புக்கு நாம் அளிக்கும் ஆதரவு ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். பெண்கள் வெற்றி பெறும் போது ஒட்டுமொத்த சமூகமும் வளர்ச்சி பெற்று வெளிப்படுகிறது. இது ஒரு கூட்டு வெற்றிக்கான முயற்சி என்று இக்கருப்பொருள் உணர்த்துகிறது.

 

ஐக்கிய நாடுகள் சபை 20 26 இலக்கு :


ஐக்கிய நாடுகள் சபை 2026 ஆம் ஆண்டிற்கான தனது மையக் கருத்தாக "உரிமைகள்,நீதி நடவடிக்கை அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக "(Rights. Justice. Action. For ALL Women and Girls ) என்பதை முன் வைத்துள்ளது. அரசாங்கங்களும் நிறுவனங்களும் பெண்களின் முன்னேற்றத்தில் உண்மையான முதலீடுகளை செய்ய வேண்டும் என்பதை இந்த மையக்கருத்து வலியுறுத்துகிறது.


அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.  மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் வரைந்து எழுதியவர் உங்கள்   ஸ்வர்ணலட்சுமி  பாலசுப்ரமணி.