- ந.தீபலட்சுமி
மாதவம் செய்திட வேண்டுமம்மா....
மாதவம் செய்திட வேண்டுமம்மா....
பெண்ணாய் பிறந்திட
நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா...
அவளே அன்னையாய்....
அவளே திருமகளாய்...
அவளே ஆக்கமுமாய்....
அவளே அனைத்துமாய்...
பெண்ணே....
நீ ஒரு சகாப்தமே.....!

அவளே அதிசயமாய்...
அவளே பிரகாசமாய்....
அவளே அணுத்துகளாய்....
அவளே சக்தி மயமாய்....
பெண்ணே...
நீ ஒரு சகாப்தமே .....
அவளே உலகை ஆள வருவாள்
அறியாமை என்னும் இருளை நீக்குவாள்
உலகம் முழுவதும் அன்பை விதைப்பாள்
அவளே அறிவுச்சுடரை ஏற்றுவாள்.....
பெண்ணே....
நீ ஒரு சகாப்தமே....
எந்தத் துறையிலும் உனக்கு விலக்கில்லை...
உன் வெற்றிக்கு எதிலும் எல்லை இல்லை....
உன் பொறுமைக்கு என்றும் முடிவில்லை...
உன் வீரத்திற்கு என்றும் வீழ்ச்சி இல்லை...
பெண்ணே....
நீ ஒரு சகாப்தமே....
மகளிர் தினத்தில் உன்னை கொண்டாடலாம்
பின்னர் நீயே திண்டாடலாம்
உனக்குள் இருக்கும் சக்தியை
வெளியே நீயும் கொண்டு வந்தால்
உலகை நீயே உன் கைக்குள் அடக்கலாம்...
பெண்ணே...
நீ ஒரு சகாப்தமே....
உன்னை போற்றிட இந்த ஒரு நாள் போதாது...
நித்தம் நித்தம் நீயே வளர்கிறாய்
உனக்கு முடிவென்பது எது?
முடிந்தால் உலகில் உயிர்கள் ஏது??
பெண்ணே....
நீ ஒரு சகாப்தமே...
நீ ஒரு சகாப்தமே.
(ந . தீபலட்சுமி, பட்டதாரி ஆசிரியை, அரசினர் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி , வேலூர் மாவட்டம்)
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}