கரந்தை தமிழ்ச்சங்கத்தின் உலகத் தமிழ் செம்மொழி சைவ மாநாடு.. 2027 ஏப்ரல் 14ல் தொடக்கம்
தஞ்சாவூர்: சோழமண்டலம் தஞ்சைத் தரணியில் நூற்றாண்டுக்கு மேல் பழமை வாய்ந்த தமிழவேள் உமாமகேசுவரனார் கட்டிக்காத்த கரந்தைத் தமிழ்ச்சங்கம் நடத்தும் உலகத் தமிழ் செம்மொழி மாபெரும் சைவ மாநாடு 2027ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
நிகழும் தமிழ் நச்சுப்புழை (பிலவங்க) வருடம் சித்திரை 1,ஆம் தேதி புதன்கிழமை காலை 9-00 மணி துவங்கி இரவு 7-00 மணிவரை ஒருநாள் சைவப் பெருவிழாவானது தமிழகத்தின் மிகச்சிறந்த சைவசமயத்தில் நுணுக்கம் சார்ந்த பேச்சாளர்களை கொண்டு வெகுசிறப்பாக கரந்தைத் தமிழ்ச்சங்கம் தலைமையேற்று நடத்த திட்டமிட்டுள்ளது.
இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் தமிழவேள் உமாமகேசுவரனார் கட்டிக்காத்த சைவத்தையும், செந்தமிழையும் இருகண்களாக பாவித்து, உலகறிய கொண்டு செல்வதே எங்களின் சீரிய நோக்கமாகும்.
இதில் குறிப்பாக சைவத்தில் தோய்ந்தவர்களான ஆளுமைகளை வைத்து சைவப் பெருவிழா நடத்த இருக்கிறோம். இவ்விழாவில் சைவமும், சைவம் சார்ந்த பன்னிரு திருமுறைகளும், சைவசித்தாந்தமுமே உயிர்மூச்சு. வேறொன்றிற்கும் குறிப்பாக இங்கு இடமில்லை.
ஒருங்கிணைப்பு குழு.
விழாவின் சீரியதலைமை: 1 கரந்தைத் தமிழ்ச்சங்க செயலாளர், இரா.சுந்தரவதனம் ஐயா அவர்கள்,
விழா நிகழ்வின் தலைமை: 2 "திருமுறைக் கலைக்களஞ்சியம்" "சைவத்தமிழ் இயலிசை அறிஞர்" "சைவசமயப் புரட்சியாளர்" "சைவத்தமிழ்ச் சுடர்மணி" "சிறந்த தமிழ்ப்பண் இசைப்போன்" "தெய்வத்தமிழிசை அறிஞர்" "முனைவர்" திருவிடைமருதூர் சிவ.ச.நடராஜதேசிகர் அவர்கள்.
செந்தமிழ் மாநாட்டின் சைவ எழுச்சியுரையினை ஆற்றவரும் சிறப்பு அழைப்பாளர்கள்:
கோபிச் செட்டிப்பாளையம் திருஞானசம்பந்தர் திருமடத் தலைவர். சிவத்திரு. சிவாக்கர தேசிக சுவாமிகள் அவர்கள்.
சைவத்தையும், செந்தமிழையும் தனது உயிர்மூச்சாகக் கொண்டிருக்கும். சைவத்திரு. பவானி தியாகராசன் ஐயா அவர்கள். சிவசேனா மாநில செயல்தலைவர். "திருமுறைக் காவலர்" பாவை.க.சசிகுமார் அவர்கள்.
மற்றும் இருபெரு திருமுறை இன்னிசை நிகழ்ச்சிகள் திறம்பட நடைபெறும்.
இன்னும் சிறப்பு அழைப்பாளர்களை அழைத்து கரந்தைத் தமிழ்ச்சங்கம் ஏற்று நடத்தும் நிகழ்வுகள் அழைப்பிதழில் அனைத்தும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.