Kiss Day.. முத்தம்!

Su.tha Arivalagan
Feb 13, 2026,12:47 PM IST

  ரதி தேவி


அன்னையின் முத்தத்தில் 

ஆயிரம் ஆனந்தம்...


தந்தையின் முத்தத்தில் 

தரணியெங்கும் 

பூ வாக.....


அண்ணனின் முத்தத்தில் 

அலைகடலென 

பேரன்பு....




சகோதரியின் முத்தத்தில் 

சஞ்சலமும் தீர.....


என்னவனின்

முத்தத்தில் 

என்னையே மறந்து....


மண்டியிட்டு கிடக்கிறது

பேரன்பு 

பிள்ளையின் முத்தத்தில்.....


ஆரத்தழுவி 

முத்தமிட 

ஆனந்தமாக 

ஊஞ்சலாடுமே 

மனித மனம் ........


நெற்றி முகர்ந்து முத்தமிடும் போது 

உனக்காக நான்.....

எனக்காக நீ..


மொத்தத்தில் எல்லாமுமாக

என்னவன் நீ....!