தமிழ்மாமணி எழுத்தாளர் இரா. கலைச்செல்விக்கு கலை ரத்னா விருது
சென்னை: அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை வழங்கும் அறம் விருதுகள் சென்னையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்விக்கு வழங்கப்பட்டது.
அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை கடந்த 10 வருட காலமாக சமூகத்திற்கு பல்வேறு வகைகளில் பெரும் பங்காற்றும் தன்னார்வலர்களை தேர்வு செய்து,பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.
2022 வருடம் பட்டிமன்ற பேச்சாளர்... சாலமன் பாப்பையா அவர்களின்..... தலைமையில் விருதுகள் வழங்கப்பட்டன.
2023 ஆம் ஆண்டு இயக்குனர் பாக்கியராஜ் தலைமையில் பல்வேறு சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
2024 ம் ஆண்டு பேராசிரியர் ஞானசம்பந்தம் மற்றும் இயக்குனரும் நடிகருமான கே. பாக்கியராஜ் அவர்களின் தலைமையில் விருதுகள் வழங்கப்பட்டன.
2025 ம் ஆண்டு பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்கள் தலைமையில் விருதுகள் வழங்கப்பட்டன.
இவ்வருடம் 2026..ஆம் ஆண்டுக்கான விருதுகள் சென்னை நாரத கானா சபாவில் ஜுன் 22 , 2026 அன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
திரைப்பட நடிகர் சதீஷ் மற்றும் நகைச்சுவையாளர் மதுரை முத்து அவர்களின் முன்னிலையில், சிறந்த ஆசிரியர்கள், சாதனையாளர்கள், தொழில் முனைவோர், கலை மற்றும் இலக்கியத்திற்கு தொண்டாற்றுவோர் என பல்வேறு துறைகளில் சேவையாற்றிக் கொண்டிருக்கின்ற சாதனையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அறம் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார்.
அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சானைச் செல்வி, சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, கலைரத்னா போன்ற 30 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.