- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி
நவசமாஜ் மகளிர் மேடையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பத்தாவது பன்னிரண்டாவது வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற சாதனை மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா, சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 27.6.2026 அன்று காலை 10 மணி அளவில் வெகு சிறப்பாக நடந்தேறியது.
நவசமாஜ் மகளிர் மேடையின் தலைவர், எழுத்தாளர் இரா . கலைச்செல்வி, மேனாள் அரசு உயர் அதிகாரி, தலைமை செயலகம் , அவர்கள் தலைமை உரை வழங்கினார். அதை தொடர்ந்து, சட்டமன்ற கூடுதல் செயலர் தேன்மொழி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். நவ சமாஜ் மாநிலத் தலைவர் டாக்டர் அன்பானந்தம் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.

இவ்விழாவில் இவ்வருடம் பத்தாவது பன்னிரண்டாவது வகுப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு , அதன் தலைவர் இரா. கலைச்செல்வி, அவர்களால் சாதனைப் பெண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் விருதுடன் ,சான்றிதழும் ,ரொக்கத் தொகைகளும் பரிசாக வழங்கப்பட்டன.

அதே சமயத்தில் கடந்த வருடம் நான்கு முக்கிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கிய சபிதா என்ற மாணவிக்கும் விருதும் சான்றிதழும் ஊக்கத்தொகையும் அளிக்கப்பட்டது.
மேலும் நவசமாஜ் மகளிர் மேடையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இதுவரை மகளிருக்காகவும், மாணவ மாணவிகளுக்காகவும் நடத்தப்பட்ட பல்வேறு விதமான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மகளிர் மேடையில் தலைவர் இரா. கலைச்செல்வி அவர்களால் சான்றிதழும் விருதும் வழங்கப்பட்டது.

நவசமாஜின் மகளிர் மேடையின் நிர்வாக குழு உறுப்பினர்களான சபிதா, புவனேஸ்வரி, லலிதா லெட்சுமி,, சந்திரமோனி, பிச்சுமணி, செல்வி ராஜாமோகன், சங்கீதா மணிமாறன் அவர்கள் சிறப்பாக தங்களின் பங்களிப்பை அளித்து ,விழா சிறக்க முக்கிய பணியாற்றினார்கள்.
லலிதா லட்சுமி வரவேற்புரையும், சந்திரமோனி நன்றி உரையும் வழங்கினார். புவனேஸ்வரி மற்றும் சவிதா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்கள்.
மதிய உணவுடன் விழா இனிதே முடிவடைந்தது.
(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக் காதல் கொண்ட அவர், நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர, கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை, சேவா ரத்னா , கவிஞாயிறு, கவியருவி, கவிச்செம்மல், உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது போன்ற 15 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.)
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
{{comments.comment}}