சமாதானம்
- க. யாஸ்மின் சிராஜூதீன்
யார் முதலில் பேசியது ...
தொடக்கம் யாருடையது....!!!
என்பதல்ல செய்தி...
கணவனுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு
"சமாதானம் "
எத்தனை பெருந்தன்மை ...!!!
எழுதப்படாத சட்டமோ ..
பெண்ணே...!!!
ஏன் இந்த வட்டமோ ...!!!
உள்ளம் பேச ஏங்க
ஏதோ ஒன்று தடுக்க ,
பாசப் போராட்டம் தொடர....!!!
உந்தன் உள்ளம் துடித்திடும்
வீம்பு கொஞ்சம் நீடித்திடும் ....!!!
இலைமறைகாயாய் உள்ளம் சிரித்திடும்...
முயற்சி செய்து முகம் அதை மறைத்திடும் ...
பொறுமையின் சிகரம் அல்லவா...!!!
கணவனுக்கு முதலிடம்
சமாதானத்தின் இருப்பிடம்...
குடும்பத்தலைவன் அல்லவா ...!!!
விட்டுக் கொடுக்கும் பாங்குதான்
இல்லறத்திற்கு சிறப்புதான்...
இருவருக்கும் பொருந்தும்தான்...!!!
யார் முதலில் பேசுவது
என்பது எதற்கு இங்குதான்...
நீயா-நானா என்பது வேண்டாமே...!!!
பிள்ளைகள் மனதில் பதிந்திடும்
கவனம் நீயும் கொள்ளனும்...!!!
குடும்பத்தின் ஆணிவேர்கள்தான்...!!
"சமாதானம்" சண்டையின் முடிவல்ல..
அன்பின் வெளிப்பாடு!!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)