சந்தோஷம்!
- க. யாஸ்மின் சிராஜூதீன்
கேட்கவே இனிமையாக உள்ளதே "சந்தோஷம் ".......
இதனை நமதாக்கிக் கொண்டால் என்ன...... ???
இதனை வெளியே
தேடுவதேனோ....
கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதனாலோ...... !!!!!!
நம்முள்ளே நம்முடன் இணைந்த சந்தோஷத்தை மறந்ததேனோ... !!!!!
பிறரைப் பார்த்து அவரின் சந்தோஷத்தை நமதாக்க ஏங்குவதேனோ......!!!!!
நம் குடிசையே நமக்கு சந்தோஷம் அளிக்கும் போது...
மாளிகையைப் பார்த்து அந்த சந்தோஷத்திற்கு ஏங்குவதேனோ....!!!!
மனதை வாடச் செய்வதற்காகவோ ......!!!
நம்முடனே இருந்து
நமக்கு சந்தோஷம் அளிக்கும்
சந்தோஷத்தை விரும்பி அனுபவித்திடுவோம்... !!!!
எட்டாத சந்தோஷத்தை நினைத்து ஏங்குவதைவிட...
எட்டிய சந்தோஷத்தை அனுபவிப்பவனே
வாழ்க்கையை ரசித்து வாழ்பவனாவான்.... !!!!
ஒவ்வொரு நொடியும் ரசித்து வாழ்ந்திடுவோம்......
சேமிக்க முடியாத நேரத்தை
இனிய நினைவுகளாய் சேமித்திடுவோம்....!!!!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)