வாழ்க்கை என்பது வரம்தானே!
- க.யாஸ்மின் சிராஜூதீன்
வாழ்க்கை என்பது வரம்தானே....
வையம் போற்ற வாழ்வோமே....
பிறப்பு என்பதே உன் முதல்
வெற்றி தான் ....
வெற்றி பல காத்திருக்கு
முயற்சி உந்தன் கையில் இருக்கு....
சின்ன சின்ன ஆசைதான்
வாழ்க்கையில் மகிழ்ச்சி அளிக்கும்தான் ...
தேவை என்றால் ஆசைகொள்....
சுயநலம் மட்டும் பார்க்காதே....
தாயும்தந்தையும் பொக்கிஷமே...
பெற்றோர் மகிழும் ஆசைகொள்...
உன்னை ரசிக்கும் ரசிகன் ஆக்கிக்கொள்...
தவறான தேவையற்ற ஆசை என்றால்...
அறிந்து நீயும் தூக்கி எறி....
பெற்றோர் மனம் வருந்தினால்
வாழ்க்கை என்பது நரகமே...
தவறு செய்வது இயல்புதான்...
தெரிந்தும் தொடர்வது தப்புதான்....
உனக்காக வாழும் பெற்றோரை
நீயும் சிந்தையில் வைக்கனும்...
பார் போற்றவாழனும்....
ஈன்றபொழுதின்
பெரிதுவக்கும்தன் மகனைச் சான்றோன் எனக் கேட்டதாய்...
உன் வாழ்க்கை சிறக்கவே
பெற்றோர் வேண்டாத தெய்வம் இல்லையே...
சிந்தித்து செயல்பட்டிடு...
சீராட்டி வளர்ந்த பெற்றோர்
மனம் சிறகடித்து பறக்கவே....
பருவம் பல கடக்கனும்
அனுபவம் பல பெற்றிடனும்....
எந்த வயது என்பது எண்ணாகுமே
சிந்தித்து நடந்தால் சீராகுமே...
அனைவருக்கும் வாழ்க்கை என்பது வரம்தானே...
வான்புகழ்கொண்டு வாழ்வோமே....
உடல் நலமே உண்ணத வரமாகுமே
சுவர்இருந்தால்தான் சித்திரமே...
வரத்தை என்றும் வசந்தமாக வைத்திடுவோம்....
நம் வாழ்க்கை நம் கையில்
தன்கையே தனக்குதவி...
அறிவோம் பேரின்பம் அடைவோம்..!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)