- - க.யாஸ்மின் சிராஜூதீன்
ஏன் புரிய வேண்டும்
எதற்குப் புரிய வேண்டும்
எப்படிப் புரிய வேண்டும்
ன்ற வினாக்களை என்னுள்
சிறுவயது பிள்ளையாய் கேட்கநேர்ந்தது...
இரண்டுபள்ளி மாணவிகளின்
உரையாடல்...
இன்றைய கணினி பாடம் புரியவில்லை
எனக்கு கடினமாக உள்ளது என ஒரு மாணவி புலம்ப...
பாடம் எளிமையாகத்தானே இருந்தது
நீ சரியாக புரிந்து கொள்ளவில்லை

புரிந்து கொண்டால் மிகவும் எளிமையாக இருக்கும் என
மற்றொருமாணவி பதில் கூறினாள்...
இதிலிருந்து மனிதர்களின் புரிதல்
ஒருவருக்கொருவர் மாறுபட்டது...
கடவுளின் படைப்பு ஒன்றுதான் என்றாலும்....
மனதின் ஓட்டத்தை ஒருமுகப்படுத்தி
புரிந்து கொண்டால் வாழ்க்கையின்
ஒவ்வொரு நிகழ்வும் செயலும்
எளிமையாகத்தான் இருக்கும்...
மனிதனுக்கு இறைவன் அளித்த ஆகச் சிறந்த பொக்கிஷம்
புரிதலும் பகுத்தறிதலும்...
அதனை சிறப்பாய் பயன்படுத்தி
சீரான புரிதலுடன் சிறப்பாய் வாழ்வோம்...
மாணவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொருத்தமே
புரிதல் இன்றேல் செயல் சிறக்காது...
வாழ்க்கை சிறக்க புரிதல் அவசியம் ... !
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு
சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்
நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு
{{comments.comment}}