நீல வானமும் பூமியும்

Su.tha Arivalagan
Apr 02, 2026,04:53 PM IST

- க. யாஸ்மின் சிராஜூதீன்


நீல வானம் வாயுக்கலவையே... 

எட்ட எட்ட உயர உயர போகுதே... 

இலக்கு தொட்டால் 

இலக்கு தொடரும் என உணர்த்துதே.... 


விடாமுயற்சியை கற்றுக் கொடுக்குதே...... 

மனிதன் சுதந்திரமானவன் என நினைக்கையில்...


இயற்கை சொன்னது என்றும் என் ஆட்சியே நீ என் பிள்ளையே ... 

ஒன்றை சார்ந்து ஒன்று வாழும் உலகையே ......


வானக் கூரை   போட்டு பூமி தரையில் அடைத்து வைத்தேனே  .... 

எல்லையில்லா சுதந்திரம் என நினைத்தாயோ .... 


எல்லை மீறினால் பொங்கி எழுவேன் மறந்தாயோ.... 

இயற்கை அன்னை என்று சொல்லி மாசுபல செய்திட்டால்...




தேசம் எல்லாம் நஞ்சாகுமே... 

தஞ்சம் புக இடமில்லாமல் போகுமே ...


பூமி சிறை என கூறி வருந்தவேண்டாமே ...... 

அழகிய பூங்கா பூமி வீடுதான்...


அதை சிறையாக்க வேண்டாமே ... 

இயற்கை அன்னையாகிய எந்தன் வேண்டுகோள் இதுவே... 


மக்கள் நாமே இயற்கையின் பிள்ளைகள்.. 

இயற்கையை நேசிப்போம்.... 


செயற்கையை தூக்கி வீசுவோம்.... 


நீல வானமும்

பூமியும் 

நமக்குத்தான்..


உயர உயர பறந்திடுவோம்... 

காற்றில் ஊஞ்சல் கட்டி ஆடிடுவோம்..... 

வானில் சிறகு விரித்து பறந்திடுவோம் ... 

பூமி  அன்னையை காத்திடுவோம்... 

நீல வானமும் பூமியும்  நமக்கு இன்பம் தரும் பாருங்கள்... 

இன்பமாய் வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள்... 


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)