தண்ணீர் தண்ணீர்!

Apr 01, 2026,10:56 AM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


நீரின்றி அமையாது உலகு 

நீருக்குக் காரணம் மழை...

மழைக்குக் காரணம் மரம்....

மரத்திற்குக் காரணம் மனம்...


ஆம்...

மனிதனின் மனம்...


மனிதன் மனது வைத்தால் மட்டுமே நீரைப் பாதுகாத்து வரும் சந்ததியினருக்குக் கொடுக்க முடியும்...


இல்லையென்றால் 

ஒரு வேளை சோதனைக் கூடத்தில் ஒரு மாதிரியைக் காண்பிக்கும் நிலையும் ஏற்படலாம்.... வேற்றுக் கிரகவாசிகளாக மாறி....




மரம் வளர்த்து மழை கொணர்ந்து நீர் காப்போம்...

மனிதம் காக்க புனிதம்(நீர்)காப்போம்....


மழை பொழிந்து ஆறு குளம்‌ நிரம்பி விவசாயம் செழித்து வீடும் நாடும் நலம் பெற நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்...


மரம் நடுவது....


மரம் நட வேண்டும்...

நடச் செய்ய வேண்டும்....

பிள்ளைகளிடம்‌ இதன் அவசியத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும்...


இதனோடு சேர்த்து நீர்வளத்தைக் காக்க நாம் செய்ய வேண்டிய மற்றுமொன்று....


நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பது...

நிலத்தடி நீர் மட்டுமே 

நாம் குடிக்கப் பயன்படும் நன்னீர்...

பூமியில் 1%க்கும் குறைவாகவே உள்ள‌ இந்நன்னீரை நாம் காக்க நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பது நலம்.


அப்போது தான் மழை நீரை பூமித்தாய் நமக்குப் பாதுகாத்துக் கொடுக்க முடியும்.


அறிவியல் பூர்வமாக யோசித்தால் நம் பூமி இயங்குவதே தண்ணீரால் தான்....


உயிர் வாழ மட்டுமல்ல

உலகு வாழ்வுக்கும் அடிப்படைத் தேவை தண்ணீரே...

புரியாத பல விஷயங்களுக்கு செல்லாமல் அடிப்படைத் தேவைகளைப் பார்த்தாலே புரியும்....


தண்ணீர் 

குடிக்க 

குளிக்க

பாத்திரம் கழுவ சமைக்க

துணி துவைக்க சுத்தம் செய்ய

விவசாயம் செய்ய

பல‌ தொழில்களுக்கும் தண்ணீர் தேவை...


அனைத்துக்கும் ஆதாரமே தண்ணீர்....

எனவே ஐம்பூதங்களில் ஒன்றாகும்...


அழுக்கைச் சுத்தப்படுத்தும்....

அசிங்கத்தை அப்புறப்படுத்தும்...


தண்ணீர் சாதாரண பொருளல்ல 

அது ஒரு புனிதம்...


நீருக்குள் இருப்பது ஒரு அற்புத சக்தி !!!


எத்தனையோ பாவங்கள் செய்துவிட்டு கங்கை நீரில் மூழ்கி‌க் கழுவி விடுவது....


அருவிகளில் குளித்து தீராத நோய்களையும் தீர்த்துக் கொள்வது.....


கடலுக்குச் சென்று குளியல் போடுவது....


புனிதத்தலங்களில் புண்ணிய தீர்த்தம் ஆடுவது.....


இன்னும் 

எத்தனையோ வியத்தகு விசயங்களைத் தண்ணீர் செய்து கொண்டிருக்கிறது....




நிறமற்ற மணமற்ற ஒரு திரவத்தின் சக்தி மகாசக்தி....


அதன்‌ அருமை தெரிந்து அதனைப் பாதுகாக்க வேண்டும்...


கவலை மறக்க நாம் செல்லும் இடம் நீர்நிலைகள் தாம்......


கடற்கரை மனதை இதமாக்கும்....


ஓ..வென கொட்டும் அருவி நம்மை உற்சாகப்படுத்தும்...


ஆற்றில் குளித்து கும்மாளம் ...


மழை பெய்யும் போதோ

குழந்தையாகக் குதூகலம்...


என நம் மனதிற்கு தண்ணீரின் மருத்துவம் மகத்துவம்!!!


உயிரோடும் உணர்வோடும் கலந்த தண்ணீரைக் காப்போம்!!!!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ரீல்ஸ் நமக்கு தேவையா?

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?

news

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு

news

தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

news

தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!

news

பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்

news

பிரியாவிடை!

news

திருமாலுக்கு உகந்த துளசியின் தெய்வீக மகிமை!

news

Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்