- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed
பிளாஸ்டிக் அற்ற உலகம் ஆரோக்கியமான வாழ்வு என்பதை உணர்ந்து நாம் அனைவரும் நெகிழி இல்லா உலகத்தை படைப்போம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30ஆம் தேதி சுழற்சி இல்லா கழிவு நாள் (International Day of Zero Waste) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு குடிமகனும் மண்ணையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கக்கூடிய பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதற்காக இந்த நாள் கொண்டாடப் படுகிறது.
ஒவ்வொரு மக்களும் மனது வைத்தால் நம்மால் புதிய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நமது அனைவரின் கடமை என்பதை உணர்ந்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களை முற்றிலும் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் இளம் வயது குழந்தைகள் எப்படி எல்லாம் பாதிப்படைந்துள்ளார்கள் ?மற்றும் திருமணமான தம்பதிகள் குழந்தைகள் இல்லாமல் இருக்கிறார்கள். ஆண் பெண் வயது வித்தியாசம் இன்றி புற்றுநோயால் பாதிக்கப்பட்டும் ,இதய நோய் மற்றும் சர்க்கரை நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்று எண்ணுகிறீர்கள்? நன்றாக சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கு தெளிவான விடைகள் கிடைக்கும். நமது முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய உணவுப் பொருட்களை கைவிட்டு தற்போது வரும் நவீன உணவுகளை சாப்பிடுவது முக்கிய காரணமாகும்.
உடலுக்கு உடற்பயிற்சி அவசியம் தேவை என்பதை உணர்ந்து பார்த்து ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு உடற்பயிற்சி அல்லது யோகாவினை வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்.
சூரிய ஒளி கடவுள் நமக்கு கொடுத்த இயற்கை மூலம் என்பதை உணர்ந்து சூரிய ஒளியில் நாம் நடக்க வேண்டும். சூரிய ஒளி நமது வீட்டில் ஜன்னல் வழியாகவும் கண்டிப்பாக வரவேண்டும். இந்த சூரிய ஒளி பற்றாக்குறையால் வைட்டமின்-D யால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளவர்களை எண்ணிப் பாருங்கள்.
நாம் நெகிழிப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் நமது உடலுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதோடு,அவற்றை மண்ணில் புதைப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. நெகிழிப் பொருட்களை கொளுத்துவதால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
விலை மலிவாக கிடைக்கிறது என்பதை மட்டும் பார்த்து நாம் நெகிழிப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொருவர் வீட்டிலும் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக்கில் தண்ணீர் பாட்டில் கொடுப்பதையும்,பிளாஸ்டிக் டப்பாவில் சிற்றுண்டிகள் கொடுப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். சூடான பொருட்களை கட்டாயம் பிளாஸ்டிக் பொருட்களில் பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும். இதுதான் புற்றுநோய்க்கு மூல காரணமாகும் என்பதை உணர்ந்து பாருங்கள் .
நமது வீடுகளில் மளிகை பொருட்களை போடுவதற்கு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து கண்ணாடி, சில்வர் ,பீங்கான் போன்ற பொருட்களை பயன்படுத்துவோம் . நான் எந்த கடைகளுக்கு சென்றாலும் துணிப்பையை பயன்படுத்துவோம். நெகிழிப்பைகளை அவர்கள் கொடுத்தாலும் நாம் வாங்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
மக்காத பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் குறைக்க முயற்சி செய்வோம். மக்கக் கூடிய கழிவு பொருட்களை பயன்படுத்துவோம். இனி வரும் நமது சந்ததிகள் ஆரோக்கியமாக வாழ நமது சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)
Short Story by Joseph Samraj: என் பெயர் ரவி!
Subhalakshmi on her Drawings: ஓவியமும் நானும்!
அவன் அப்படிதான்!
If you obey all the rules, you miss all the fun
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?
Short Story: தங்கக்கட்டி நடைபாதை
ஏன் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
{{comments.comment}}