ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!

Jun 29, 2026,04:24 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ வருடம் 2026 ஜூன் மாதம் 29ஆம் தேதி ஆனி மாதம் 15 ஆம் நாள் திங்கட்கிழமையான இன்று பௌர்ணமி அமைந்துள்ளது மிகவும் விசேஷமானது ஆகும். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் வருகிறது.ஆனி மாதம் வரும்போது ஆனி மாத மூலம் நட்சத்திரத்தில் வருகிறது. ஆனி மாத பௌர்ணமி அன்று சிறப்பு வழிபாடுகள் திருமஞ்சனம் நடக்கும்.


தமிழ் மாதங்களின் பெயரை  பௌர்ணமியுடன் சேர்த்து அழைக்கப்படும். பொதுவாக ஆனி மாதம் வரும்  பௌர்ணமிக்கு "ஜேஷ்ட பௌர்ணமி" என்று பெயர் உள்ளது.


பௌர்ணமி நேரம் :


ஜூன் மாதம் 29ஆம் தேதி  திங்கட்கிழமையான இன்று அதிகாலை 04:21am முதல் ஜூன் 30   20 26 செவ்வாய்க்கிழமை அதிகாலை 06:11 மணி வரை பௌர்ணமி திதி உள்ளது.


திருவண்ணாமலை கிரிவலம்:




பௌர்ணமியில் திருவண்ணாமலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்வது வழக்கம். இன்று அதிகாலை முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை கிரிவலம் செய்வது சிறப்பு.


கிரிவலம் செல்ல உகந்த நேரம்:


ஜூன் 29 திங்கள் அதிகாலை தொடங்கி ஜூன் 30 செவ்வாய்கிழமை அதிகாலை வரை கிரிவலம் செய்வது அதீத சிறப்பு.


சோமவார பௌர்ணமி :


பொதுவாக திங்கட்கிழமையில் வரும் விரதங்கள் சிறப்பானவை. இந்த ஆண்டு ஆனி மாதம் பௌர்ணமி திங்கட்கிழமையில் வருவதனால் இதனை "சோமவாரப் பௌர்ணமி" என்றும் அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் கிரிவலம் செய்து சிவனை வழிபட நல்ல ஆரோக்கியம் மற்றும் வாழ்வில் நல்ல மேன்மை கிடைக்கும்.


சிறப்பம்சங்கள்:


திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 14 கிலோ மீட்டர் கிரிவலம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்.


நடைபாதையில் பக்தர்களுக்கு எளிதாக செல்ல குடிநீர்,உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்கங்கள், பல்வேறு ஆன்மீக மையங்கள் மற்றும் ரிஷிகள் தவம் செய்த குகைகள் அமைந்துள்ளன. பௌர்ணமியில் கிரிவலம் செல்வது மன அமைதியை தருவதோடு உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும். "ஓம் நமசிவாய"எனும் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பது மன அமைதியை மேம்படுத்தும்.


ஆனால் அனைவராலும் திருவண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செய்ய இயலாது.எனவே, அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று கிரிவலம் செய்யலாம்.சதுரகிரி மலையிலும், திருச்செங்கோடு மலையைச் சுற்றிலும் பக்தர்கள் கிரிவலம் செய்கிறார்கள். குலதெய்வ வழிபாடு இந்த ஆனி மாத பௌர்ணமியில் செய்வது குடும்ப நன்மைக்கு வழிவகுக்கும்.


திருவண்ணாமலையைப் போன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி  மலைக்கோவில் பழனியிலும் பௌர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. 


அனைத்து சிவாலயங்களிலும், அம்மன் கோவில்களிலும் மற்றும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இந்த ஆனி மாத பௌர்ணமி அனைவர் வாழ்விலும் ஒளி பெருக எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்வாழ்வு நல்கட்டும்.


மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!

news

சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!

news

மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!

news

தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!

news

மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

அதிகம் பார்க்கும் செய்திகள்