Inspiring Thursday: வெற்றிக்கு வழி ... உன்னிடமே!
- கவிதாயினி டாக்டர் எஸ். மணிமேகலை
உன்னால் என்ன முடியும் என்று
உனக்கே தெரியாது
உன் சக்தியை நீயும் புரிந்து கொண்டால்
சாதிக்க தடை ஏது
முயற்சிகள் செய்து தோற்பது எல்லாம்
தோல்விகள் கிடையாது
விழுந்து விடாமல் யாரும் இங்கே
எழுந்தது கிடையாது
இல்லை என்ற சொல்லை கூட
இன்றே தூக்கி போடு
நாளை உன்னை மேலே ஏற்றும்
துணிச்சலுக்குப் போராடு...
வீழ்ந்தால் கூட பந்தாய் மாறி
வேகம் கொண்டு மேலே ஏறு
முந்திக் கொண்டு முன்னால் ஓடு
முயற்சியுடன் போராடு
தாயின் கருவில் கலையாது சிசுவாய் பிறந்தாயே
தாங்கும் உலகில் மனிதா நீயும் அதில் ஜெயித்தாயே
முதலில் உன்னை நம்பு
உன்னால் எதையும் சாதிக்க முடியும்
சோம்பலை சாம்பலாக்கி ஒழுக்கத்தை உணர்வாக்கிடு
உழைப்பை உடைமையாக்கி சிரிப்பை மூலதனம் ஆக்கிடு..
முதலில் வெற்றி கிட்டும் வரை போராடு
முடிவில் அந்த வெற்றியே உனக்கு விழா எடுக்கும்
(கவிதாயினி டாக்டர் எஸ். மணிமேகலை, ஈரோட்டைச் சேர்ந்தவர். அக்குபங்சர் மருத்துவர், எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் என பன்முகத் திறமையாளர்)