தெரிந்தும் தெரியாது என்கிறாய்?

Su.tha Arivalagan
Dec 22, 2025,04:21 PM IST

- கவிஞர் சு நாகராஜன்


குடி குடியை கெடுக்கும்- என

தெரிந்தும் குடிக்கிறாய் 


புகை ஊதினால் 

புற்றுநோய் உண்டாகும் -எனத் 

தெரிந்தும் புகைக்கிறாய் 


திருடினால் 

திருடன் பட்டம் பெறுவாய் -என

தெரிந்தும் திருடுகிறாய் 


வேகமாய் சென்றால்

விபத்து ஏற்படும் -என 

தெரிந்தும் வேகமாய் செல்கிறாய் 




வருமானம் மீறி

கடன் வாங்கினால்

கஷ்டம் உண்டாகும்- எனத்

தெரிந்தும் வட்டிக்கு

பணம் பெறுகிறாய் 


கல்வி அறிவு இல்லாமல்

கற்றவர் சபையில் 

இடமில்லை- எனத்

தெரிந்தும் கல்வியை 

புறக்கணிக்கிறாய் 


உழைத்தால் தான் 

ஊதியம் உண்டு- எனத்

தெரிந்தும் உழைக்காமல்

நேரம் வீணாக்குகிறாய் 


எல்லாம் தெரிந்து

செய்துவிட்டு- நான்

தெரியாமல் செய்து விட்டேன் 

என்று மனம் வருந்தும்

மனிதனே- உன்னை 

என்ன சொல்வது


(கவிஞர் சு நாகராஜன், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்)