எண்ணம் போல் வாழ்க்கை!
Feb 23, 2026,11:41 AM IST
- சி.குமரேஸ்வரி
எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை சிறக்கும்,
இனிமை மலர இதயம் மலரும்.
மனது நல்லதை மட்டுமே நினைக்கட்டும்,
பொறாமை, கோபம் ஆகியவற்றை மறப்போம்.
நல்ல விதை, நீர், சூரியன் செடிக்கு தேவை;
அன்பு, நேசம், நற்சிந்தனை நமக்கு தேவை.
நற்சிந்தனை உயர்வை தரும்,
உலகம் உன்னை உற்று நோக்கும்.
எண்ணம் தூய்மையாக,
உண்மையாக இருக்கட்டும்;
உறுதியும் மனதில் கொண்டு
இலக்கை அடைவோம் எளிதாக.
ஒளிமயமான எதிர்காலம்
நம் கரம் பிடித்து நிற்கும்,
காலம் நம் நிலை உயர்த்தும்.
ஏணி போல் ஏற்றும் நம்மை,
வாழ்க்கை வசந்தமாகும்.
எண்ணம் போல் வாழ்க்கை.
(குமரேஸ்வரி சி, பட்டதாரி ஆசிரியர் -ஆங்கிலம், விகே அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்காளிப்பாளையம், திருப்பூர்)