- கா.சா. ஷர்மிளா
மொழி என்பது இனத்தின் பண்பாடே ....
பண்பாடு என்பது இனத்தின் அடையாளமே ...
அடையாளம் தமிழ் மொழியின் வரலாறே ...
வரலாற்றின் இலக்கியங்களாக.. காப்பியங்களாக..
இலக்கண இலக்கியங்களாக...
என் அன்னை தமிழ் நிற்பவள்..
அமுதுக்கு நிகராக
உயிருக்கு மேலாக
பண்பாட்டுக் கலாச்சாரத்தின் அடையாளமாக நிற்பவள்..
எங்கும் இனிமை
எதிலும் செழுமை
அனைத்திலும் வளமை
கவிகளுக்கு புலமை
எம்மொழியிலும் இல்லா
தமிழனுக்கு அடையாளமாக
வலம் வருபவள்..
காதல் உணர்வு பொங்கும் மொழியாக..
தேனினும் இனிய மொழியாக..
தெவிட்டாத செந்தமிழாக..
எண்ணங்களின் கோர்வையாக..
கருத்துக்களை வெளிப்படுத்தும் களமாக..
என்றென்றும் நிற்பவளே...
என்னுள் என்னைக் காண வைத்த தமிழே...
என் எண்ணங்களை ஒளிரச் செய்த தமிழே...
என் இதய நாளங்களை மீட்டிய தமிழே...
உன்னை வணங்குகின்றேன் போற்றுகின்றேன்
உலக தாய்மொழி நாளிலே...
(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)
Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!
Short Story by Joseph Samraj: என் பெயர் ரவி!
Subhalakshmi on her Drawings: ஓவியமும் நானும்!
அவன் அப்படிதான்!
If you obey all the rules, you miss all the fun
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?
Short Story: தங்கக்கட்டி நடைபாதை
ஏன் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
{{comments.comment}}