Tamil Short Story: ராசிக்கல்!

Jul 08, 2026,01:16 PM IST

- வீ.தமிழ்ச்செல்வி


அவன் எதையோ தேடிக் கொண்டிருக்கிறான். நடுக்கூடத்தின் வலது புறத்தில் உள்ள அறையில் இருக்கும் அலமாரி முழுவதும் தேடிக் கொண்டிருக்கிறான். அங்கே ஓரமாய் ஒரு இரும்பு பெட்டி அதையும் திறந்து திறந்து மூடுகிறான். பின் குட்டி போட்ட பூனை போல் அங்கும் இங்கும் உலாவி, தான் தொலைத்த எதையோ தேடிக் கொண்டிருக்கிறான்.


பரண், மேடை, கூடை, மற்றும் கூரையின் உச்சத்தில் எல்லாம் தேடிப் பார்க்கிறான். திடீரென்று 'வீர், வீர்' என்று கத்துவதற்கு ஆரம்பித்து விட்டான். இவ்வளவு நேரம் அங்கு குடி கொண்டிருந்த அமைதி .. ஒரு சில நொடிப்பொழுதில்  தாங்க முடியாத அளவிற்கு ஒரு இரைச்சலை உருவாக்கியது அவனின் அழுகை.. அவன் இப்படி அழுது, புலம்பி நாங்கள் பார்த்ததே இல்லை.. திடீரென்று அழுகையை நிறுத்திவிட்டு வீட்டின் கொல்லப்புறத்திற்கு ஓடினான். அங்கே ஒரு கிணற்றிற்கு அருகில் அடுக்கி வைத்திருந்த செங்கற்களை நகர்த்தி  தேடினான் அங்கும் அவன் தேடியது அவனுக்கு கிடைக்கவில்லை.




மீண்டும் மீண்டும்.. கதறி , அலறி கண்ணீர் விட்டான்.. ஆண் குழந்தைகள் அழமாட்டார்கள்.. என்று அங்கே ஒரு குரல்.. ஆனால் நீண்ட நேரமாக கத்திய அந்த குழந்தை நா வறண்டு விம்மல் எடுக்க துவங்க ..  எல்லொரும் குழப்பத்தில் இருந்த அந்த குழந்தையிடம்.. என்ன தேடுற?  என்றார்கள்.. அவனோ சற்று யோசித்து.. என் நீல நிற ராசிக்கல் .. காணவில்லை.. என்றான்.. 


ஒரு சிறிய கல்லிற்காக இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்தாயா? என்று வினவினார்கள். சரி நான் சந்தைக்கு போனால் புதிய கல் வாங்கி தருகிறேன் என்று ஒருவர் வாக்கு கொடுக்க .. அவனும் அமைதியாய் சென்று விட்டான்.. கொஞ்ச நேரத்தில் அவன் தேடலை மறந்து உறக்கத்தில் ஆழ்ந்தான். நாட்கள் சென்றன. பிறகு அந்த கல்லை அவ்வப்போது வீட்டில் கேட்டிருப்பான், தேடியும் இருப்பான். பின் குழந்தை பருவம் முடித்து உயர்கல்வி பயில  வெளியூர் சென்று விட்டான். இப்போது அந்த கல்பற்றி அவனுக்கு நினைவே இல்லை. 




அந்தக் கல்லுக்காக அவன் அழுததை வீட்டில் அனைவரும் நகைச்சுவையாய் பேசி சிரிப்பதும் உண்டு. பிறகுதான் ஒரு உண்மையை அறிந்து கொண்டான். தன் தம்பி அந்தக் கல்லை எடுத்துக்கொண்டு போய் தன் நண்பர்களிடம் பந்தயம் வைத்து தோற்றுவிட்டான் என்பதையும், அந்தக் கல் அங்கே இல்லை என்பதை அறியாமல்  தான் தொடர்ச்சியாக தேடியதையும் நினைத்து சிரித்துக்கொண்டான்.. 


இப்படித்தான் சில இழப்புக்கள் காலம் கடந்த பின் பெரிய இழப்புகளாக பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.. சில நேரங்களில் நம் செயல்களின் விளைவை சந்திக்க பயந்து ஒளிந்து கொள்கிறோம்.. அந்த நேரத்தில் விடுதலைக்காக மட்டுமே நம்மிடமிருந்தே நாம் தப்பிக்க முயல்கிறோம்.


(வீ. தமிழ்ச்செல்வி, அஉபள்ளி, அங்கு செட்டிபாளையம், பண்ருட்டி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்