உன் நேசம் என் சுவாசம்!
- ரதி தேவி
நேசமே
காதல் என்ற மூன்று
எழுத்தில் மறைந்துள்ளாய்.....
ஆருயிர் காதல்
அன்னைத் தம்
பிள்ளையின்பாற்
கொண்ட காதல்....
நெஞ்சில்
ஒளிந்துள்ள
காதல்
தந்தை தன்
பிள்ளையின்பாற்
கொண்ட காதல்...
உயிரோடு உயிரான
காதல்
கணவன்
மனைவியின்பாற்
கொண்ட காதல்...
நட்பிற்கு அழகு
தோழமைகளின்
காதல்....
அன்பு, நேசம்,நட்பு
மூன்றையும் வென்று விடும்
காதல்...!
இலைமேல்
பனித்துளி போல் அல்ல
நம் நட்பு..
வானத்தில் நட்சத்திரம்
போன்று
நட்பெனும்
காதல் ....
என்னவனே
என்னவென்று
சொல்வேன்
உந்தன் கரம்
பிடித்து
சொன்ன காதலை .......!
வேண்டுகிறேன்
ஏழேழு ஜென்மம்
நீயே
என் உயிராக ....!
உன்னையே நேசிக்கிறேன்
உனக்காக எந்தன் உயிர்
உன் சுவாசமே என் மூச்சு
என் மனம்
வாடும் போது
உந்தன் தோளே...
கொள்கிறேன்....!
தேடுகிறதே
உந்தன் மடியே
கொஞ்சம் கண்
அயர்ந்து கொள்கிறேன்.....!
இமை மூடும்
நேரம்
உந்தன் உள்ளங்கையே
தலையணையாக....
என்னவனின்
நேசமே
என் வாசம்
இதய துடிப்பின்
ஒவ்வொரு நொடியும்
உன்னையே நினைத்து....
நீ அருகில் இருக்கும்
அந்த நொடியே
என் வாழ்வில்
சந்தோஷம்...
யாதுமாகி இருக்கின்றாய்
யாசகம் கேட்க
ஏதுமில்லை என்னவனிடம்
வேறு எதுவும்
தேவையில்லை
என்னவனின்
பேரன்பு ஒன்றே
போதும்
இந்த யுகத்தில்....!