அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. பால ராமரின் எழில் மிகு சிலை இன்று ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்கின்றனர். ரூ. 2000 கோடியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ராமர் கோவில் திறப்பையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பால ராமர் பிரதிஷ்டை முடிந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கூடியிருந்த கூட்டத்தினர் மத்தியில் பேசினார். அப்போது, அயோத்திக்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் யோகிகளை வரவேற்கிறேன். இந்த அற்புதமான நாளில் இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். துறவிகள், பக்தர்கள் அயோத்திக்கு வருகை தர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

புதிதாக திறக்கப்பட்ட ராமர் சிலையை தரையில் விழுந்து நெடுஞ்சாண் கிடையாக வணங்கினார் பிரதமர் நரேந்திர மோடி.
நகைகளால் அலங்கரிக்கப்பட்டு கையில் வில் அம்பு உடன் தங்க வண்ண ஆடையில் பால ராமர் ஜொலிக்கிறார். புதிய ராமர் சிலையின் முன்பு மனமுருகப் பிரார்த்தனையில் ஈடுபட்டார் பிரதமர் மோடி. சிலை திறப்பையடுத்து அயோத்தி ராமர் கோவில் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர் துவப்பட்டது.
புதிய பால ராமர் சிலையின் கண்களில் இருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டு, ராமர் சிலையின் பாதங்களில் தாமரை மலர் வைத்து பிரதமர் பூஜை செய்தார். 51 அங்குல புதிய ராமர் சிலை பிரதிஷ்ட செய்யப்பட்டது.

புன்னகை பூத்தவாறு காணப்படும் ராமர் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பூஜை செய்கின்றனர்.
அயோத்தி ராமர் கோவிலில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலை பிரதிஷ்டை கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். எழில்மிகு ராமர் சிலை வெளி உலகுக்கு காண்பிப்பு. முதல் பூஜையை பிரதமர் நரேந்திர மோடி செய்தார்.
கருவறையில், ராமர் சிலை முன்பாக அமர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பூஜை செய்கிறார். இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி. ஆளுநர் ஆனந்தி பென் படேல், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்பு.
சிறப்பு பூஜையில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் உடன் இருக்கிறார். நெற்றியில் திலகம் இட்டு, தீர்த்தம் அருந்தி, சிறப்பு பூஜையில் பங்கேற்று வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இன்னும் சிறிது நேரத்தில் ராமர் சிலை பிரதிஷ்டை தொடங்க உள்ளது.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவின் முக்கிய அம்சமான பிரான் பிரதிஷ்டைக்கான சிறப்பு பூஜைகள் தொடங்கியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி பூஜையில் கலந்து கொண்டுள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு வருகை தந்துள்ள நடிகர் ரஜினிகாந்த் விஐபிக்கள் வரிசையில் அமர்ந்து விழாவைக் கண்டு ரசித்து வருகிறார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!