47வது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் ஜூனியர் பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.

அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுக் கொண்டார் டொனால்ட் டிரம்ப். அதிபர் பதவியில் 2வது முறையாக அவர் அமர்கிறார்.

அமெரிக்காவின் புதிய துணை அதிபராக ஜேடி வான்ஸ் பதவியேற்றுக் கொண்டார்.

அமெரிக்க கேபிடல் அரங்கில் பதவியேற்பு விழா சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது. முன்னாள் அதிபர்கள், பல்வேறு தலைவர்கள், டெக் துறை தலைவர்கள் கேபிடலில் குழுமியுள்ளனர். சிறிது நேரத்தில் டிரம்ப் அதிபராகப் பதவியேற்கவுள்ளார்.


ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக், எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க், அமேஜான் நிறுவனத்தின் ஜெப் பெஜாஸ், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஆகியோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றுள்ளனர்.

டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார்.

அதிபராகப் பதவியேற்பதற்காக வெள்ளை மாளிகைக்கு தனது மனைவி மெலனியாவுடன் வருகை தந்த டொனால்ட் டிரம்ப்பை, தற்போதைய அதிபர் ஜோ பைடன் தனது மனைவியுடன் வரவேற்று அழைத்துச் சென்றார்.

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!