சென்னை: தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை நேரலையாக இங்கு பார்க்கலாம். இந்தப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

மிக்ஜாம் புயல் பாதிப்பால் வட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளுக்கு நிவாரண உதவியை விரைந்து வழங்கிடக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு ஜனவரி 13ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு சந்திக்கவுள்ளது.
மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 12,176 காளைகளும் 4,514 வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அலங்காநல்லூரில் 6,099 காளைகளும், பாலமேட்டில் 3,677 காளைகளும், அவனியாபுரத்தில் 2,400 காளைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1,318 மாடுபிடி வீரர்களும், பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1,412 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிக்கையே அதிர வைக்கும் வகையில் அட்டகாசமாக டென்னிஸ் விளையாடி அசத்தி விட்டார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித். இதுதொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.
Novak Djokovic & Steve Smith playing tennis 🎾
— Johns. (@CricCrazyJohns) January 11, 2024
- Video of the day. pic.twitter.com/ksP65KG4lV
அயலான் படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை சென்னை ஹைகோர்ட் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
எம்.எஸ் சேலஞ்ச் நிறுவனத்திற்கு, அயலான் பட நிறுவனம் ஒரு கோடி ரூபாய் தர வேண்டிய நிலையில், முதற்கட்டமாக 50 லட்சத்தை செலுத்தியது. மீதமுள்ள 50 லட்சம் பணத்தை ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் திருப்பிச் செலுத்துவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இடைக்கால தடை நீக்கப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி அயலான் திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் வாய்ப்பு இருந்தால் கலந்து கொள்வேன். மதத்துக்கும், ஜாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி தான் அதிமுக கட்சி . ராமர் கோயில் திறப்பு விழாவில் எந்த மதத்தினரும், எந்த சாதியினரும் கலந்து கொள்ளலாம். என் காலில் வலி இருக்கிறது, அதனால் வாய்ப்பு இருந்தால் கலந்து கொள்வேன். மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு சீட் வழங்கப்படும். மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். கூட்டணி அமைந்ததும் முறைப்படி அறிவிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
சாதி, மதம், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பக்தியுடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டிய விழா அயோத்தி ராமர் கோவில் விழா. ஆனால் இது அப்படி நடக்கவில்லை. எனவே காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் இந்த விழாவில் பங்கு பெறாததை நான் ஆதரிக்கிறேன் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, தேனி, போன்ற தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கரூர், திருச்சி, செல்லும் பேருந்துகள் சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்தும், சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் செல்லும் பேருந்துகள் காந்திபுரம் நிலையத்திலிருந்தும், உதகை,கூடலூர் செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படவுள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, 19,484 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து 12/01/2024 முதல் 14/01/2024 வரை இயக்கப்படும் பேருந்துகளின் விவரத்தை அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
வட கிழக்குப் பருவ மழை ஜனவரி 15ம் தேதியுடன் முடிவடையக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அயலான் படம் நாளை திரைக்கு வரவுள்ள நிலையில் அப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன், திருப்பதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!