ஜப்பானில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் சுனாமி அலைகள் தாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வட மத்திய ஜப்பானில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் எதிரொலியாக பல்வேறு ஆப்டர்ஷாக்குகளும் ஏற்பட்டுள்ளன. தற்போது சுனாமி அலைகள் தாக்கி வருவதால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாதிப்பு நிலவரம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

ஜப்பானில் ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமி அலைத் தாக்குதலால் அங்குள்ள அணு மின் நிலையங்களுக்கும், அணு உலைகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அணு மின்நிலைய வளாகங்களில் அபாயகரமான வகையில் இல்லாத சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் சுனாமி அலைத் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது ரஷ்யா மற்றும் வட கொரியாவிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து அங்குள்ள கடலோரப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி அலைத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதற்கு அவசர கால எண்களையும், இமெயில் முகவரியையும் ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

இஷிகாவா பிராந்தியத்தில் உள்ள வஜிமா துறைமுகப் பகுதியில் 1.2 மீட்டர் உயரத்திலான சுனாமி அலைகள் தாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல டோயாமா நகரிலும் சுனாமி அலைகள் தாக்கி வருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு பல்வேறு கடலோரப் பகுதிகளில் 1 முதல் 5 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகள் கடற்கரைகளைத் தாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிப்பு விவரம் குறித்து தெரியவில்லை.
ஜப்பானை உலுக்கிய பலத்த நிலநடுக்கத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அதிர வைப்பதாக உள்ளது. பல்வேறு கட்டடங்களும் இந்த நிலநடுக்கத்தின்போது ஆட்டம் கண்டுள்ளன. சேத விவரங்கள் தெரியவில்லை.

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!