Gold Rate: புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை... சவரன் 64,000 ஆயிரத்தை நெருங்குகிறது!

Feb 10, 2025,01:25 PM IST
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.63,840க்கு விற்கப்பட்டு வருகிறது. கடந்த 4ம் தேதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. உலகளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து இருப்பது தான் தங்கத்தின் விலை உயர்விற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டு வருகிறது. மேலும் தங்கம் விலை உயர வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் இன்றைய (10.02.2025) தங்கம் விலை....


சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,980க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,706க்கும் விற்கப்பட்டு வருகிறது. 8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 63,840 ரூபாயாக உள்ளது. 10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.79,800 ஆக உள்ளது. 100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,98,000க்கு விற்கப்படுகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,706 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.69,648 ஆக உள்ளது. 10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.87,060ஆக உள்ளது. 100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,70,600க்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம் மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,980க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,706க்கும் விற்கப்படுகிறது. டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,995க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,721க்கும் விற்கப்படுகிறது. கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,980க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,706க்கும் விற்கப்படுகிறது. பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,980க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,706க்கும் விற்கப்படுகிறது. கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,980க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,706க்கும் விற்கப்படுகிறது. புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,980க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,706க்கும் விற்கப்படுகிறது. அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,985க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,711க்கும் விற்கப்படுகிறது. முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை... குவைத் - ரூ.7,490 மலேசியா - ரூ.7,115 ஓமன் - ரூ. 7,792 சவுதி ஆரேபியா - ரூ.7,614 சிங்கப்பூர் - ரூ. 7,024 அமெரிக்கா - ரூ. 7,697 கனடா - ரூ.7,770 ஆஸ்திரேலியா - ரூ.6,861 சென்னையில் இன்றைய வெள்ளி விலை.... தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை கடந்த 5ம் தேதியில் இருந்து எந்தமாற்றமும் இன்றி அதே விலையிலேயே இருந்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 107 ஆக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 856 ஆக உள்ளது. 10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1070 ஆக உள்ளது. 100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,700 ஆக உள்ளது. 1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,07,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

Red Heart

சமீபத்திய செய்திகள்

news

தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!

news

சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்

news

41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!

news

மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை

news

கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு

news

போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு

news

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை... சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி... அண்ணாமலை

news

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஏன்? : உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து சீமான் கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்