சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் செப்டம்பர் மாதம் 92.77 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். விரைவிலேயே 1 கோடி பயணிகள் என்ற சாதனை இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது மெட்ரோ நிறுவனம்.
சென்னை மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இன்று மெட்ரோ ரயில்கள் மாறி நிற்கின்றன. ஒரு காலத்தில் பல்லவன் தான் சென்னை மாநகர போக்குவரத்தின் அடையாளமாக இருந்தது. பிறகு புறநகர் ரயில்கள் மிகப் பெரிய அடையாளமாகின. இப்போது அந்த இடத்தை மெட்ரோ பிடித்து விட்டது. மெட்ரோ இல்லாத சென்னையை நினைத்துப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு மெட்ரோ பயணம் மக்களின் முக்கிய அங்கமாகியுள்ளது.
பெருமழை வெள்ளக் காலத்தில் மக்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவியாக இருந்தது மெட்ரோ ரயில்கள்தான். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில்களில் 92.77 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
2024 செப்டம்பர் மாதத்தில் 92.77 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008 பயணிகளும், மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மேமாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும், ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகளும் மெட்ரோ ரயில்களில்பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக 06.09.2024 அன்று 3,74,087 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2024, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 30,99,397 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 7,319 பயணிகள், குழு பயணச்சீட்டு(Group Ticket) முறையை பயன்படுத்தி 7,149 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 40,73,640 பயணிகள் (Online QR 1,76,890; Paper QR 21,91,054; Static QR 2,58,952; Whatsapp - 5,92,360; Paytm 4,41,609; PhonePe – 3,30,305; ONDC – 82,470), மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 20,90,192 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.
மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வான் சாகச நிகழ்ச்சி, உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மெரீனா பீச் விமான சாகசம்.. சென்னை மெட்ரோவுக்கு ஜாக்பாட்.. ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்
Nobel prizes 2024.. மருத்துவத்திற்கான நோபல் பரிசு .. 2 ஸ்வீடன் ஆய்வாளர்களுக்கு அறிவிப்பு
திமுக அரசு முறையாக திட்டமிடவில்லை.. இது அரசின் தவறுதான்.. சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
Kerala tour diaries.. அழகான மலம்புழா அணை .. பிரமிக்க வைக்கும் பாலக்காடு கோட்டை!
பிக்பாஸ் தமிழ் சீசன் 8.. கேம் ஆரம்பிப்பதற்கு முன்னாடியே.. பக்கென்று கொளுத்தி போட்ட பிக்பாஸ்!
விமான சாகச நிகழ்ச்சி மரணங்கள்.. இனிமேல் கவனமா இருங்க.. தவெக தலைவர் விஜய் அட்வைஸ்!
ஏர்ஷோவில் பங்கேற்றோர் போட்டுச் சென்ற குப்பை.. கிட்டத்தட்ட 19 டன்.. அகற்றிய சென்னை மாநகராட்சி!
மதுரையில் 20 ஆயிரம் பேரைத் திரட்டி.. கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்ற.. எம்.பி. சு. வெங்கடேசன்
{{comments.comment}}