2026 தேர்தலில் போட்டியிட விஜய் திட்டம்?... தீயாய் பரவும் தகவல்

Jun 09, 2023,02:39 PM IST

சென்னை : தமிழகத்தில் 2026 ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட நடிகர் விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது.

நடிகர் ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவிலும் சரி, தமிழக அரசியலிலும் சரி ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு, பரபரப்பை கிளப்பியவர் நடிகர் விஜய். இவர் அரசியலுக்கு வரும் எண்ணத்தில் 2009 ம் ஆண்டு தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை துவக்கினார் விஜய். இந்த அமைப்பின் மூலம் சமூக நல உதவிகள் உள்ளிட்ட பணிகளை செய்து வந்தனர்.



இதற்கிடையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பலர் போட்டியிட்டு குறிப்பிட்ட சில இடங்களை கைப்பற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தனர். இதனால் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரிக்க துவங்கியது. சமீபத்தில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ தேர்வில் அதிக மார்க் வாங்கிய மாணவர்களை விஜய் சந்தித்து பேசிய போதும் அவர் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டம் தான் இது என பேசப்பட்டது.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வரும் விஜய் கடைசியாக வாரிசு படத்தில் நடித்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். லியோ படத்தை முடித்த கையோடு அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் விஜய். விஜய் தனது தளபதி 70 படத்துடன் சினிமாவில் இருந்து விலக போவதாகவும் சமீப நாட்களாக ஒரு பேச்சும் கோலிவுட்டில் அடிபடுகிறது.

இந்நிலையில் விஜய் அரசியலில் என்ட்ரி கொடுப்பதற்கான திராவிட கட்சிகளின் கொள்கைகள், அரசியல் ஆய்வாளர்கள் ஆகியோருடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். அதோடு 234 தொகுதிகளிலும் சர்வே நடத்தி, தனது அரசியல் செல்வாக்கு குறித்து சர்வேக்களையும் விஜய்யின் மக்கள் இயக்கம் நடத்தி வருவதாக விஜய்க்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

2021 ம் ஆண்டு தேர்தலிலேயே விஜய் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் தேர்தல் களத்தில் ரஜினி, அரசியலுக்கு வருவதில் தீவிரம் காட்டி வந்ததால், தான் அரசியலுக்கு வருவதற்கு இது சரியான நேரமாக இருக்காது என விஜய் அமைதியாக இருந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்