நாட்டின் கோடீஸ்வர முதல்வர் இவர் தான்...ஸ்டாலினுக்கு எந்த இடம் ?

Apr 13, 2023,12:47 PM IST
புதுடில்லி : நாட்டில் உள்ள கோடீஸ்வர முதலமைச்சர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் சொத்து விபரங்களை ஜனநாயக சீர்த்த சங்கம் வெளியிட்டுள்ளது. இதில் ரூ.510 கோடி சொத்துக்களுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முதலிடத்தில் உள்ளார்.

கோடீஸ்வரர் இல்லாமல் லட்சங்களில் சொத்து மதிப்பு வைத்துள்ள முதலமைச்சர்கள் பட்டியலில் ரூ.15 லட்சம் சொத்துடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் ரூ.1.2 முதல்வர் சொத்துக்களையும், அரியானா முதல்வர் எம்.எல்.கட்டார் ரூ.13 கோடி சொத்தும் வைத்துள்ளனர்.



28 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் சமீபத்தில் நடந்த தேர்தல்களில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் இந்த சொத்து மதிப்பு மற்றும் கிரிமினல் வழக்குகள் குறித்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 30 முதல்வர்களில் 29 பேர் கோடீஸ்வரர்கள். 

அதிக அளவில் கிரிமினல் வழக்குகளைக் கொண்ட முதலமைச்சர்களின் பட்டியலில் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு ரூ.63 கோடி அளவிற்கு சொத்து உள்ளது. இவரின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட ரூ.13.7 கோடி உயர்ந்துள்ளது. முதலிடத்தில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு 2022 ம் ஆண்டை விட ரூ.373 கோடி உயர்ந்துள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு ரூ.56 லட்சம் மட்டுமே சொத்து உள்ளது. நாட்டின் ஏழையான முதல்வர் இவர் தான்.

தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் மீது 64 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்ற வழக்குகளை அதிகம் கொண்ட முதல்வரின் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாம் இடத்தில் உள்ளார். இவர் மீது 10 கடுமையான குற்றங்கள் உள்ளிட்ட 47 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவரைத் தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி மீது 38 வழக்குகள் உள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

news

உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!

news

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்