பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும் கூடாரவல்லி பற்றிய தெரியுமா ?

Jan 11, 2023,10:25 AM IST
மார்கழி மாதத்தின் சிறப்புக்களில் ஒன்றாக குறிப்பிடப்படுவது ஆண்டாள் பாடிய திருப்பாவை பாடல்கள். தினம் ஒரு பாசுரம் வீதம் மார்கழியின் 30 நாட்களும் 30 பாசுரங்கள் பாடப்படுகிறது. திருப்பாவை பாடல்களை பாடி, பெருமாளை நினைத்து மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து, பெருமாளின் பெருமாளைகளை பாடி வழிபடுவதற்கு பாவை நோன்பு என்று பெயர். பெருமாளின் அருளை பெறுவதற்காக இந்த நோன்பு இருக்கப்படுகிறது.



திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்கள், ஆண்கள், திருமணமான பெண்கள் அனைவரும் இந்த விரதத்தை இருக்கலாம். பாவை நோன்பு இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமானவர்களுக்கு வளமான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம். பாவை நோன்பு எப்படி இருக்க வேண்டும், கண்ணனை எப்படி வழிபட வேண்டும், அவனின் அருளை பெற என்னவெல்லாம் செய்ய வேண்டும் என ஆண்டாள் தனது பாசுரங்களில் பட்டியலிட்டு விளக்கி இருப்பார்கள்.

பாவை நோன்பினை நிறைவு செய்ய போகிறதை ஆண்டாள் தனது 27 வது பாசுரத்தில் குறிப்பிட்டிருப்பார். இந்த நாளில் தான் ஆண்டாள், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாளின் திருவடிகளை அடைந்ததாக சொல்லப்படுகிறது. பாவை நோன்பிருந்து ஆண்டாள், பெருமாளின் அருளை பெற்று மோட்சம் அடைந்த நாளையே கூடாரவல்லியாக கொண்டாடுகிறோம். பெருமாள் கோவில்கள் அனைத்திலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் பெருமாளுக்கு அக்காரஅடிசல் நைவேத்தியம் படைத்து வழிபடுவார்கள்.

கூடாரவல்லி நாளில் பெருமாளையும், ஆண்டாளையும் வழிபட்டால் அவர்களின் அருள் கிடைத்து, வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேருவார்கள். செல்வ வளம் பெருகும்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்