மக்களே உஷார்...அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்துமாம்

Apr 12, 2023,03:22 PM IST
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றும், 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும், 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



காலை 11 மணி முதல் பகல் 3 மணி வரை பொது மக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

ஆனால் நடப்பு ஆண்டின் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தென்மேற்கு பருவமழை 96 சதவீதம் வரை பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வெப்பநிலை இந்தியாவின் பருவமழையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்