பொய்!

Oct 19, 2026,11:31 AM IST

- சிவசத்தியா, காரைக்குடி


கனியிருப்பக் காய் கவர்ந்தற்று!


இல்லறத்தில் தொடங்கி

துறவறத்தில் முற்றுப் பெறும்

மாந்த வாழ்வில்


இல்லறத்தானே (ளே)

மனையாள் நன்மக்கள்


சுற்றம் தழுவிக் 

கடமையாற்றிடும்


தலையாயப்பண்பு

பெற்றுள்ளதனால்


சந்திக்கும் மாந்தர்கள்

ஆற்றும் பணி




குமுகாய சூழ்நிலைக்கேற்ப

புரிந்துணர்ந்து வாழும்


தகவமைப்பு பண்பாற்றிடும்

தெய்வமே


ஆதியும் அந்தமும் சோதியாய் நிறைந்த  மெய்க்குள்


மெய்ப்பொருளாய் மெய்யவன் நிறைந்திருக்க


மெய் தவறுவதுண்டோ? "

தெய்வம்


வாழ்க்கை நேமியை வலியின்றி நடத்திட


வழிக்காண்பதே

வாழ்வியலாய்


மெய்யுடன் பிறந்த பொய்யும்

பொய்யுடன் பிறந்த மெய்யும் 


அத்தனருளிய அருட்கொடை யன்றோ?" 


அளவோடு வளமுடன் வாழ

உணவுக்கேற்ற உவர்ப்பை


பக்குவமாய் பயன்படுத்தி

சுவைகூட்டுதல் போல


தனக்கும் பிறர்க்கும்

தற்காலத்திற்கும் 


பிற்காலத்திற்கும் 

உடலாலும் மனதாலும்


துன்பம் தராத

எண்ணம் சொல் செயல்... 


பொய்மையும் வாய்மையிடத்து

புரைதீர்ந்த நன்மையே! 

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்