பெண்.. தலை நிமிர்ந்து நிற்கும் மிகப் பெரும் ஜோதி!

Oct 11, 2026,01:05 PM IST

- அ.சுபாலட்சுமி


"பெண் என்பவள் யாருக்கும் அடிமை இல்லை. சமூகத்தில் தலை நிமிர்ந்து நிற்கும் மிகப் பெரும் ஜோதி"


என்ற பாரதியாரின்  வாக்கிற்கேற்ப பெண்கள் இப்போதய சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ்கிறாள் என்பது ஒருபுறம் இருந்தாலும் பெண்ணின் குழந்தை பருவத்தில் அவள் பல கஷ்டங்களையும் இன்னல்களையும் தாண்டித்தான் இந்த சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்கிறாள்.


ஒரு காலத்தில் பெண் குழந்தையை ஒதுக்கிவைத்ததால் தான் என்னவோ இன்று பல ஆண்கள் தன் வாழ்க்கைத்துணையை தேடி அலைகின்றனர். அட பெண் கிடைக்காமல் ஆண்கள் இன்று சிரமப்பட அதுதான் காரணமோ என்னவோ!


சிறு வயதில் திருமணம், கல்வியின்மை, சமுதாயத்தில் சமமாக மதிக்கப்படாதது போன்ற பல இன்னல்களில் இருந்து அவள் மீண்டு வந்தாலும் பெண்கள் இந்த சமுதாயத்தில் இன்னமும் பல இன்னல்களை சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்கள். 




தன்னை காப்பாற்றிக்கொள்ள வழி தெரியாமல் அலைகிறாள். பல அதிநவீன வசதிகள் இருப்பினும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு எங்கே? அந்த அதி நவீன வசதிகள், நடந்த பிறகு நடந்ததை சொல்லுகின்றதே தவிர அவளது பாதுகாப்பு என்பது இன்னும் முழுமையாக இல்லை.


இன்னும் சொல்லப்போனால் இந்த மாதம் நடந்த உண்மை சம்பவம், ஓர் ஐந்து வயது குழந்தை நம் தமிழகத்தில் ஓர் இருபத்து ஆறு வயது அரக்கனால் வதைசெய்யபட்டுள்ளாள். இதுபோன்ற பல சம்பவங்கள்.. பாவம் அந்த பிஞ்சு குழந்தை. அது இந்த உலகத்தை பார்த்த போது எத்தனை ஆசைகள் மற்றும் கனவுகளுடன் இங்கே பிறந்திருக்கும்.....


சமுதாயமே, பெண் குழந்தையை வாழவிடு . அவளது வளர்ச்சியே சமுதாயத்தின் வளர்ச்சி!


(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்