Reality video: கனடாவுக்குப் போனா ஈஸியா வேலை கிடைச்சுடுமா.. உண்மை நிலவரம் என்ன?

Jun 29, 2025,09:06 AM IST

டோரன்டோ: அமெரிக்கா, கனடாவுக்குப் போனால் ஈஸியாக வேலை கிடைத்து விடும், ஜம்முன்னு செட்டிலாகி விடலாம் என்று  இந்தியர்கள் உள்பட பல்வேறு வெளிநாட்டினரும் நினைக்கின்றனர். இதனால்தான் சட்ட விரோதமாக பல நாட்டினரும் அமெரிக்காவுக்குள் ஊடுறுவிக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மை நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது.


கனடாவில் வேலை தேடி இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டு மாணவர்கள் வேலைக்காக நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கும் ஒரு வீடியோ காட்சி, அங்குள்ள உண்மை நிலவரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 


கனடாவில் வசிக்கும் ஓர் இந்தியப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த இந்த காணொளி, வெளிநாட்டு மாணவர்களிடையே நிலவும் கடுமையான வேலைவாய்ப்புப் போட்டியைக் காட்டுகிறது. வெளிநாடுகளில் ஏராளமான வேலைவாய்ப்புகளும், சிறந்த வாழ்க்கை முறையும் கிடைக்கும் என்ற பொதுவான இந்தியர்களின் எண்ணத்திற்கு மாறாக, பல வெளிநாட்டு மாணவர்கள் எதிர்கொள்ளும் சவாலான யதார்த்தத்தை அவர் சுட்டிக்காட்டுகிறார்.




கனடாவில் நிறைய வேலைகளும் பணமும் இருப்பதாக நினைக்கும் என் இந்திய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்தக் காணொளியைக் காட்டுங்கள் என்று அந்தக் காணொளியில் அப்பெண் கூறுகிறார். ஒரு சிறிய வேலைவாய்ப்பு கண்காட்சிக்கு வெளியே வேலை தேடுபவர்களின் நீண்ட வரிசையை அவர் காட்டுகிறார். இது ஒரு அடிப்படைப் பயிற்சி வேலை என்றும், 5 முதல் 6 பேர் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார். 5, 6 பேருக்குத்தான் வேலை கிடைக்கும். ஆனால் நிற்கும் கூட்டத்தைப் பாருங்கள். இதுதான் கனடாவின் உண்மை நிலை. இதற்கு நீங்கள் தயாராக இருந்தால் கனடா வாருங்கள், இல்லையென்றால் இந்தியாவே சிறந்தது என்றும் அவர் வலியுறுத்துகிறார்.


இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, கனடாவில் நிலவும் வேலைவாய்ப்பு நெருக்கடியையும் அதிகரித்து வரும் வேலையின்மையையும் எடுத்துக்காட்டுகிறது. இது புலம்பெயர்ந்தோர் மற்றும் வெளிநாடு செல்ல விரும்புவோர் மத்தியில் பலத்த விவாதத்தைத் தூண்டியுள்ளது.


அதேசமயம், ஆம், வேலை கிடைப்பது கடினம்தான். ஆனால் சரியான திறமைகளுடன் நீங்கள் இருந்தால் உங்களுக்கான வேலை கண்டிப்பாக கிடைக்கும், சாதிக்கவும் முடியும் என்று ஒருவர் கூறுகிறார். இன்னொருவர், கனடாவில் வேலைகள் உள்ளன, பிரச்சனை திறன் பற்றாக்குறைதான், வேலைப்பற்றாக்குறை அல்ல. மைக்ரோசாப்ட், அமேசான், லூலெமன், பிசி ஹைட்ரோ, டெலஸ், ஃபோர்டிஸ்பிசி மற்றும் வான்கூவர் கோஸ்டல் ஹெல்த் போன்ற நிறுவனங்கள் எப்போதும் பணியமர்த்துகின்றன. இது சரியான திறமைகளை வைத்திருப்பது பற்றியது, நகரம்/நாட்டைக் குறை சொல்வது பற்றியது அல்ல என்று தெளிவுபடுத்துகிறார்.


எந்த ஊராக இருந்தால் என்ன எந்த நாடாக இருந்தால் என்ன.. வேலைக்கு எப்போதுமே பிரச்சினைதான்.. அதேசமயம், நீங்கள் திறமையானவராக இருந்தால் எந்த இடத்திலும் உங்களால் சாதிக்க முடியும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்