சென்னை: அதிமுகவின் 2வது மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியலை கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தனி அணியாக போட்டியிடுகிறது. இந்த அணியில் தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு நேற்றுடன் முடிவடைந்தது.
இதில் தேமுதிகவுக்கு விருதுநகர், கள்ளக்குறிச்சி,கடலூர், திருச்சி, மத்திய சென்னை ஆகிய 5 தொகுதிகளை அதிமுக தேமுதிகவிற்கு ஒதுக்கியுள்ளது. புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு இடம் என ஒதுக்கியது போக மீதம் உள்ள 33 தொகுதிகளிலும் அதிமுகவே களம் காண்கிறது. அதிமுக நேற்று தனது முதல் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது. 16 பேர் கொண்ட அந்த பட்டியலில் முக்கிய வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில் இன்று இரண்டாவது மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது.

அதிமுக கூட்டணியில் பெரிய கட்சி அதிக அளவில் எதுவும் இல்லை. தேமுதிக மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான கட்சியாக உள்ளது. பாமக அதிமுக கூட்டணியில் சேரும் என்று எதிர்பார்த்த நிலையில், பாமக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தது அதிமுகவிற்கு இது பெரிய ஏமாற்றமாகி விட்டது என்றே செல்லலாம். கூட்டணியில் பெரிய கட்சிகள் என்று எதுவும் இல்லாததால் அதிக தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று வெளியிடப்பட்ட அதிமுக 2வது வேட்பாளர் பட்டியல்
ஸ்ரீபெரும்புதூர் - டாக்டர் பிரேம்குமார்
வேலூர் - டாக்டர் பசுபதி
தருமபுரி - டாக்டர் அசோகன்
திருவண்ணாமலை - கலியபெருமாள்
கள்ளக்குறிச்சி - குமரகுரு
திருப்பூர் - அருணாச்சலம்
நீலகிரி (தனி) - டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன்
கோயம்புத்தூர் - சிங்கை ஜி. ராமச்சந்திரன்
திருச்சி - பி. கருப்பையா
பெரம்பலூர் - சந்திரமோகன்
மயிலாடுதுறை - டி.பாபு
சிவகங்கை - பனங்குடி சேவியர் தாஸ்
தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
திருநெல்வேலி - சிம்லா முத்துச்சோழன்
கன்னியகுமரி - முனைவர் பசுலியான் நஸ்ரேத்
புதுச்சேரி - தமிழ்வேந்தன்
விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் யு. ராணி களம் காண்பார் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}