சென்னை: தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் புரட்டாசியில் விலை குறையும், திருமணத்திற்கு நகை வாங்கலாம் என காத்திருந்த வாடிக்கையாளர்கள் கவலையும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், வாடிக்கையாளர்கள் மிகுந்த கவலை அடைந்து வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரியை குறைத்தது. இதனால், தங்கம் விலை மத்திய பட்ஜெட்டின் போதே அதிரடியாக குறையத் தொடங்கியது. அதன் பின்னர் சவரனுக்கு ரூ.5000 வரை குறைந்தது . இந்த விலை குறைவால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.
இந்நிலையில் புரட்டாசி மாதம் 3ம் தேதிக்கு பிறகு மீண்டும் தங்கம் விலை சிறுது சிறுதாக உயரத் தொடங்கியது. இந்த விலையேற்றம் வாடிக்கையாளர்களிடையே ஒரு சுணக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னரும் நகை விலை உயர்ந்து தற்போது புதிய உச்சத்தை தொட ஆரம்பித்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் 56,000த்தை தொடும் அளவிற்கு உயர்ந்து வருகிறது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை....

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பெருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் கிராமிற்கு ரூ.20 அதிகரித்து ரூ.6,980 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 55,840 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.69,800 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,98,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,615 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.60,920 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.76,150 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,61,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,980க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,615க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,995க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,630க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,980க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,615க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,980க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,615க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,980க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,615க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,980க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,615க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,985க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,620க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
சென்னையில் நேற்று எந்த மாற்றமும் இருந்த வெள்ளி விலை இன்றும் அதே விலையிலேயே இருந்து வருகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.98 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 784 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.980 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,800 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.98,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வெளுத்து வாங்கும் மழை: நீலகிரிக்கு 'ரெட் அலர்ட்'...5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
காங்கேயம் காளைகளின் கம்பீரம்.. நாட்டு மாட்டுப் பால்.. கொங்கு நாட்டின் பெருமைகள்!
தென்தமிழ் தலையங்கம்: உலக இளம்பிள்ளை வாத நாள் - இன்னும் தொடரும் போராட்டம்!
மழை பொழியும் மலைகள், கரைபுரண்டு ஓடும் ஆறுகள்.. மயங்க வைக்கும் மருத நிலம்!
சினத்தால் அறமும் கெடும் சிந்திக்கா செய்கை கெடும்.. ஔவையின் பொன்மொழி 60 (7)
இதயம் நுழைந்து சிறு சிறு தூறலாக மடல் நிறைந்து வழிந்தோடி!
மேற்குத் தொடர்ச்சி மலையின் கம்பீரமும் - தாலாட்டும் ஞாபகங்களும்!
செழிப்பான சிந்தனை வளர்க்கும் வள்ளுவர் கோட்டம்!
முப்பது வருடங்களுக்கு முன் நடந்தது என்ன? - அவள் யாரென்று தெரியுமா? -(தொடர்கதை அத்தியாயம் 2)
{{comments.comment}}