- ஸ்வர்ணலட்சுமி
கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் இந்த வருடம் 20 26 மே மாதம் 4ஆம் தேதி துவங்குகிறது.
தமிழ்நாட்டில் கோடை காலம் என்றாலே நம் அனைவர் நினைவிலும் வருவது கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தான். ஆனால் இப்பொழுதே அக்னி நட்சத்திரம் வெயிலை காட்டிலும் கோடை வெப்பம் சுட்டெரிக்கிறது. இப்போது நிலவும் கோடை வெப்பத்திலிருந்து நம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்வது? என்பதை பற்றி காண்போம்.
அக்னி நட்சத்திர காலம் :
சூரியன் கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் 25 நாட்களை கத்திரி வெயில் எனப்படுகிறது. இந்த பராபவ ஆண்டு மே மாதம் 4 தேதி திங்கட்கிழமை முதல் மே 28ஆம் தேதி வியாழக்கிழமை வரை அக்னி நட்சத்திரம் காலமாகும். இந்த கால கட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். அக்னி நட்சத்திர நாட்களில் சூரியனின் கதிர்கள் நேரடியாக பூமியில் விழுவதால் உஷ்ணம் உச்சத்தில் இருக்கும்.
வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதற்கு ஒரு 15 சம்மர் டிப்ஸ்(summer tips) இப்பதிவில் பார்ப்போம்.
ஏப்ரல் மாதத்திலேயே தமிழகத்தில் பல இடங்களில் 102டிகிரி பாரன்ஹீட்டிற்குமேல் (Fahrenheit ) வெப்பம் பதிவாகி உள்ளது. இதை மனதில் கொண்டு கீழ்க்காணும் டிப்ஸ்களைக் கடைப்பிடிக்க ஆரம்பிங்க.

1 . நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை கடும் வெப்பம் அனல் வீசும் நிலையில் இருப்பதால் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.
2 . நிறைய தண்ணீர்(நல்ல குடி தண்ணீர்) அருந்துவது முக்கியம். ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்.
3. இளநீர், மோர், நுங்கு, பழ சர்பத், ஃப்ரெஷ் ஆன பழச்சாறுகள், ஃப்ரூட் சாலட்டுகள் அவ்வப்போது எடுத்துக் கொள்வது நல்லது.
4. கம்மங்கூழ், கரும்பு ஜூஸ், மோர் சேர்த்து பழைய சாதம் சிறிய வெங்காயம், வெள்ளரிப்பிஞ்சு சேர்த்து உட்கொள்வது நல்லது.
5. நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளான வெண்பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், சௌசௌ, நூன் கோல், முள்ளங்கி, மல்லித்தழை கருவேப்பிலை,புதினா போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
6. பழ வகைகளில் ஆரஞ்சு, சாத்துக்குடி, முலாம்பழம், வெள்ளரிப்பழம், கிர்ணி பழம்,டிராகன் ஃப்ரூட், திராட்சை, சீதாப்பழம், தர்பூசணி, சப்போட்டா, ஆப்பிள், மாதுளை, மாம்பழம், வாழைப்பழம் அனைத்து பழ வகைகளும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
7. வெளியில் செல்லும் பொழுது குடை, தலைக்குத் தொப்பி, பாட்டிலில் தண்ணீர், நீர் மோர், எலுமிச்சை ஜூஸ் எடுத்துச் செல்வது நல்லது. நிறைய தேநீர், காபி குடிப்பவர்கள் மாற்றாக லெமன் டீ,
கிரீன் டீ பயன்படுத்துவது நல்லது.
8. பருத்தி ஆடைகள் அணிவது,முக்கியமாக வெள்ளை மற்றும் பேஸ்ட்டல்( pastel) கலரில் ஆடைகள் உடுத்துவது சிறப்பு. இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகள் உடுத்துவது சிறப்பு.
9. இயன்றவரை வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் காலை 10:00 மணிக்குள் சமையல் வேலைகளை முடிப்பது நன்று. அதிக நேரம் அடுப்படியில் நிற்காமல் எளிமையான உணவுகளை சமைப்பது நன்று.
10. கோடை விடுமுறை காலங்களில் குழந்தைகளை வெளியில் விளையாட செல்வதை தவிர்த்து, வீட்டிலேயே அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளை விளையாடச் செய்வதும், எதையாவது கிரியேட்டிவ் ஆக அவர்களுக்கு பிடித்த கலைகளில் அவர்களை ஈடுபடுத்துவதும், அதிக நேரம் (குறிப்பாக நாள் முழுவதும்) செல்போன், டிவி பார்ப்பதை தவிர்த்து சிறந்த முறையில் கோடை விடுமுறையை கழிக்க அவர்களுடன், பெற்றோர்கள் தங்களை ஈடுபடுத்துவது சிறப்பு.
11. வீட்டினுள் வளர்க்கக்கூடிய(Indoor plants)செடிகளை வளர்க்க குழந்தைகளுக்கு ஊக்குவியுங்கள். இடவசதி அமைந்துள்ள வீடுகளில் சிறிய தொட்டிகளில் செடிகளை வளர்க்க குழந்தைகளை ஈடுபடுத்துவது சிறப்பு.
12. அவரவர் குடும்ப சூழ்நிலைகளுக்கும், வசதிகளுக்கும் ஏற்ப குளிர்ச்சியான மலைப் பிரதேசங்களுக்கு அவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வது, பெற்றோர்களுக்கும் குழந்தைகளுடைய மனநிலைக்கும் புத்துணர்ச்சி உருவாக்கும்.
13. : AC (Air condition ) இல் அதிக நேரம் வேலை செய்பவர்கள் அவ்வப்போது வெளியில் உள்ள சுற்றுப்புற காற்றையும் சுவாசிப்பது நல்லது. 24 மணி நேரமும் ஏசியில் இருப்பதை தவிர்த்து அதிகாலை நேரங்களில் வெளியில் வெளிப்புற காற்றில் (walking )நடைப்பயிற்சி செய்வது சிறப்பு.
14. குழந்தைகள் முதல் பெரியவர் வரை வீட்டில் இருக்கும்பொழுது அவ்வப்போது தண்ணீர் குடிக்க அவர்களை ஊக்கப்படுத்துவது சிறப்பு. குளிர்சாதன பெட்டியில்(ஃப்ரிட்ஜில்) வைக்கப்பட்ட தண்ணீரை விட மண் பானையில் தண்ணீர் ஊற்றி உபயோகிப்பது உடல்நலத்திற்கு நன்மை பயக்கும்.
15. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை நல்லெண்ணெய் தேய்த்து சுத்தமான நீரில் குளிக்க உடல் சூடு தணியும். காலை மாலை இருவேளையும் குளிப்பது நன்று.
அக்னி நட்சத்திரத்தில் என்னென்ன? செய்யலாம் என்னென்ன? செய்யக்கூடாது என்பதை பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.
அக்னி நட்சத்திரம் என்பது வெறும் வெப்பமான காலம் மட்டுமல்ல. நம் உடலையும்,மனதையும் பக்குவப்படுத்தும் ஒரு காலமாகும். முறையான உணவு பழக்கம் மற்றும் ஆன்மீக வழிபாடுகள், பாதுகாப்பான வாழ்க்கை முறை மூலம் இந்த கத்திரி வெயில் நாட்களை ஆரோக்கியமாக கடப்போம்.
மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வாக்காளர்கள் கவனத்திற்கு...ஓட்டு போடுவது எப்படி?
திமுக, அதிமுக இரண்டுமே பாஜக.,வின் அடிமை...கடைசி நாள் பிரச்சாரத்தில் விளாசிய விஜய்
கடைசி நாள் பிரச்சாரம்...கூடுதல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி
வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்...இது இருந்தால் ஓட்டு போடலாம்
Agni natchatiram: அக்னி நட்சத்திரம் 2026 .. வெளுக்கெடுக்க ஆரம்பிக்கும் வெயில்.. சம்மர் டிப்ஸ்!
வயதாகி விட்டது என்று சொல்லாதீர்கள்.. Do not say you have grown old!
சாதிக்கத் துடிச்சா.. என்றுமே இளமைதான்.. If you have goals to achieve you are still young !
எங்கெல்லாம் பாராட்டப்படவில்லையோ.. அங்கெல்லாம் you should be unavoidable too!
The 8:10 Rickshaw.. ஒத்திப் போ ஒத்திப் போ.. கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ!
{{comments.comment}}