- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
அன்னை சரஸ்வதி
அருள் புரிந்தாள்!
இந்த அன்பு பசுபதி
அகம் மகிழ்ந்தான்!
கண்ணின் கருவிழி
இமை எனும் சிறகுடன்
நலமுடன் வாழ்வது போல்
நல்வழி காட்டி நின்றாள்!
அவன் சிந்தையின்
சிறப்பு கண்டான்!
புகழ் மழையில்
நனைந்து மகிழ்ந்தான்!

கலை ஞான தெய்வம்
ஆட்கொண்டது!
நலம் சூழும் வாழ்வு
தினம் அமைந்தது!
இல்லம் இனிமையாயிற்று!
உள்ளம் மகிழ்வு கண்டது!
செல்வம் சேர்ந்து வந்தது!
இவன் மனது நன்றி சொன்னது!
வீணை சரஸ்வதி
தேனின் குரலுடன்
கானம் இசைத்து நின்றாள்!
புவி ஞாலம் ரசிக்கக் கண்டான்!
இவன் வணங்கி
மகிழ்ந்து நின்றான்!
அன்னை மகிழ்ந்து
ஆசி தந்தாள்!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).
செங்கோல் - இந்திய ஜனநாயகத்தின் உச்சியில் மிளிரும் வரலாறு
சமையல் With ஸ்வர்ணா - மழைக்காலத்திற்கான ஸ்பெஷல் மணத்தக்காளி காய் & பூண்டு குழம்பு!
அன்னை சரஸ்வதி.. இல்லம் இனிமையாயிற்று! !
அறிவு கொழுக்க அகல் கொளுத்துவோம் - ஆயுதம் செய்ய அறிவை வழுத்துவோம்!
கலைமகளின் திருநாள்!
பெண் என்பவர் யார்?
என்று மாறும்?
சிரிப்புக்குப் பின்னால் சில கண்ணீர் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (4)
ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையும் !
{{comments.comment}}